தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் மழை? சென்னை வானிலை மையம்
சென்னை:
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.
வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் வட கடலோர பகுதிகளில் மணிக்கு 35 முதல் 55 கிமீ வரை காற்று வீச கூடும் என்றும் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் சென்னையில் அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியல் வெப்பம் நிலவும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.