தமிழக போலீஸ் உஷார் நிலை

சென்னை:
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து இருவேறு விதமான தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் தமிழகம் முழுதும் காவல்துறையினர் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.

சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், அதிகாரிகளை அவசர அவசரமாக வரவழைத்து கூட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார். இதைத்தொடர்ந்து சென்னையில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் காவல் அதிகாரிகள் யாரும் அறிவிப்பு வெளியாகும் வரையில் தங்களது வீடுகளுக்குச் செல்லவேண்டாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதே போல, தமிழகம் முழுதும் அந்தந்த பகுதி காவல்துறை அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.