sun

வானிலை சுழற்சி தான் இதற்கு காரணம், இதில் பயப்பட ஒன்றுமில்லை. 1997ல் எல் நினோ (முதல் முறையாக வானிலை மாற்றம்) ஏற்பட்டது. அதன் காரணமாக, 1998ல் வெப்ப அலை தோன்றியது, பின்னர் 2002ல் மிதமான எல் நினோ வந்தது. 2003ல் அதிக வெப்ப அலை காரணமாக இந்தியாவில் நூற்றுக்கணக்கான மக்கள் இறந்தனர். 2015 வெப்பமான ஆண்டாகயிருந்தாலும், அதிக அளவு மழையைக் கண்டது தமிழ்நாடு. அதே போல் இந்த ஆண்டில், ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களை வெப்பமான குளிர்காலம் என்றே கூறலாம்.
வானிலை மாற்றத்திற்கு மக்கள் தொகை பெருக்கம், கட்டுப்படுத்த முடியாத மாசு நிலை, குறைந்து வரும் பசுமை, வளர்ந்து வரும் நகரமயமாக்கல் போன்ற பலவும் காரணங்களாக இருக்கலாம்.
இனி வரும் மாதங்கள் பற்றி –
மே மாதம் வரை பல நாட்கள் சராசரிக்கு மேலே வெப்பநிலை இருக்க வாய்ப்புகள் உள்ளன. கோடை காலம் முன்பைவிட வெப்பமாகத் தான் இருக்கும். எல் நினோ காரணமாக ஜூன் / ஜூலை மாதங்களில் வெப்பநிலை சிறிது இறங்கக்கூடும். மேலும், ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கிடையே நல்ல கோடைக்கால பருவமழைக்கு ஒரு வாய்ப்புண்டு.
பிரதீப் ஜான்
(வானிலை பற்றி பதிவுயிடுபவர்)