“தமிழ்நாட்டுக்கு எல்லா உதவியும் செய்வேன்!”: சசிகலா தலையில் கை வைத்து பிரதமர் உறுதி

download-1

முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தனி விமானம் மூலம் சென்னை வந்தார் பிரதமர் மோடி. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல் வைக்கப்பட்டுள்ள ராஜாஜி பவனுக்கு சென்றார். அங்கு பல்லாயிரக்கணக்கான மக்களின் கண்ணீருக்கு மத்தியில் அஞ்சலி செலுத்தினார்.

அந்த நேரத்தில் தமிழக முதல்வர் ஓ பன்னீர்செல்வம் கதறி அழுதபடி இருந்தார். அவரைக் கட்டி தழுவி ஆறுதல் கூறினார். அருகில் இருந்த ஜெயலலிதாவின் தோழி சசிகலாவிடமும் பிரதமர் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்.
இதனையடுத்து சசிகலாவின் தலையில் கை வைத்து ஆறுதல் சொன்ன மோடி தமிழகத்திற்கு எல்லா உதவிகளையும் தமிழகத்திற்கு வேண்டிய எல்லா உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாக உறுதியளித்தார்.

முதல்வர் ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஏராளமான அரசியல் பிரமுகர்களும் வந்துகொண்டிருக்கிறார்கள். இவர்களில் பல மாநில முதல்வர்களும் அடங்குவர்.

இந்த நிலையில் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய நண்பரான சந்திரபாபு நாயுடு இசட் ப்ளஸ் பாதுக்காப்புடன் அஞ்சலி செலுத்த வந்தார்.
அப்போது அங்கு கர்நாடகா முதல்வர் சித்தராமையா அஞ்சலி செலுத்தி கொண்டிருந்தார் அதே நேரத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலும் அவ்விடத்திற்கு வருகை தந்தார்.

இதனால் அங்கு திடீரென தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதில் அங்கு நின்றிருந்த முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ,சித்தராமையா,கெஜ்ரிவால் ஆகிய மூவரும் கூட்டத்திற்குள் சிக்கினர்..
ஆனால் உடனடியாக Z ப்ளஸ் பாதுகாப்பு படையினர் அவர்களை மீட்டு பத்திரமாக அனுப்பி வைத்தனர்.