தற்கொலை செய்துகொண்ட பெண் டி.எஸ்.பி.யின் பாடல்கள்: வாட்ஸ் அப்பில் பரவும் சோகம்

Dsp-vishnupriya

திருச்செங்கோடு:

நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட பெண் டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா பாடிய பாடல்கள் வாட்ஸ் அப்பில் பரவி மேலம் சோகத்தை அதிகப்படுத்தி வருகிறது.

திருச்செங்கோடு பகுதி டி.எஸ்.பியாக பதவி வகித்த விஷ்ணுபிரியா நேற்று தனது குவார்ட்டஸ் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

கடலூரைச் சேர்ந்த இவருக்கு வயது 27

மிகுந்த ஈடுபாட்டுடன் காவல் பணியில் பணிபுரிந்த விஷ்ணுபிரியா, நேற்று காலையில் கூட ஆசிரியைகள் நடத்திய போராட்டத்தை தனது கனிவான பேச்சின் மூலம் முடித்துவைத்தார்.

இந்த நிலையில் அவர் திடுமென தற்கொலை செய்துகொண்டது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஓமலூர் தலித் இளைஞர் கோகுல்ராஜ் தலை துண்டிக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டது. அதில் ஒன்றுக்கு தலைமையேற்றவர் விஷ்ணுபிரியா.

இந்த வழக்கில் அவர் சிறப்பாக செயல்படவில்லை என்று கூறி உயரதிகாரிகள் கண்டித்ததாகவும் அதனால் மனம் உடைந்து அவர் தற்கொலை செய்துகொண்டதாகவும் சிலர் கூறுகிறார்கள். இதற்கிடையே  விஷ்ணுப்ரியாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கோகுல்ராஜின் தாய் சித்ரா தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், விஷ்ணு பிரியா பாடிய பாடல்கள் என்று வாட்ஸ் அப்பில் சில பாடல்கள் பரவி வருகின்றன.

IMG-20150919-WA0004 இதற்கிடையில் விஷ்ணுபிரியா தனது கடைசியாக எழுதிய கடிதம் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில், “குடும்பத்தினருடன் சேர்ந்து மகிழ்ச்சியாக வாழ ஆசைப்பட்டேன். அது முடியாமல் போய்விட்டது. எனது உடலை போஸ்ட்மார்ட்டம் செய்யாமல் என் குடும்பத்தாரிடம் ஒப்படைத்துவிடுங்கள்” என்று அவர் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.

விஷ்ணு பிரியா  இனிமையான குரலில்  பாடிய பாடல்கள்..

 

 

Leave a Reply

Your email address will not be published.

You may have missed