தவித்து நிற்கும் த.மா.கா தலைவர்கள்

1

மக்கள் நலக்கூட்டணி – தே.மு.தி.க. கூட்டணியுடன் த.மா.கா. கூட்டணிவைத்தது  அக் கட்சிக்குள் பெரும் கொந்தளஇப்பை ஏற்படுத்தி உள்ளது.

அ.தி.மு.கவுடன் த.மா.கா. கூட்டணி ஏற்படுத்திக்கொள்ளும் என்றே பரவலாக தகவல் பரவியிருந்தது. அக் கட்சி இரண்டாம் கட்ட தலைவர்களும், தொண்டர்கள் பெரும்பான்மையோரும் அதே கருத்தோடு இருந்தார்கள்.

இந்த நிலையில் அ.தி.மு.க. புறக்கணிப்பால், வேறு வழியின்றி ம.ந.கூ – தே.மு.தி.கவுடன் கூட்டணி வைக்கும் முடிவை எடுத்தார் த.மா.கா தலைவர் வாசன்.

இந்த முடிவை எதிர்த்து இரண்டாம் கட்ட தலைவர்களான எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன், ஞானசேகரன், பீட்டர் அல்போன்ஸ், கோவை தங்கம் உட்பட பலர் குரல் கொடுத்துவருகிறார்கள்.

இவர்களஇல் பலர், மீண்டும் தாய்க்கட்சியான காங்கிரஸில் மீண்டும் இணைய விரும்பி, காங்கிரஸ் டில்லி மேலிடத்தைத் தொடர்புகொண்டனர். அக் கட்சி தலைவர் சோனியா அல்லது துணைத்தலைவர் ராகுல் முன்னிலையில் சேர விரும்பினர்.

ஆனால் அவர்களை சந்திக்க வாய்ப்பு மறுக்கப்பட்டதாக தகவல் பரவியருக்கிறது. மேலும், “காங்கிரஸ் கட்சியில் பலவித பதவிகளை அனுபவத்துவிட்டு, தேர்தல் தோல்விக்குப் பிறகு வெளியேறி புதுக்கட்சி துவக்கினீர்கள். இந்த நிலையில் தேசியதலைவரை சந்திக்க நினைப்பது ஏன்?

தவறுக்கு வருத்தம் தெரிவித்து கட்சியில் சேர வேண்டுமானால்,  மாநில தலைமையை தொடர்புகொண்டு சேர்ந்து உறுப்பினர் அட்டை பெறலாமே” என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாம்.

இதனால் காங்கிரஸில் சேர விரும்பிய த.மா.கா தலைவர்கள் தர்மசங்கடத்தில் தவித்துக்கொண்டிருக்கிறார்களாம்.