தாயை தூக்கிலிட்டு கொன்ற தீவிரவாதி

ISIS
ISIS

ராக்கா:
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதி ஒருவன் ‘அந்த அமைப்பை விட்டு வெளியேறுமாறு’ கூறிய தனது தாயை  கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிரியாவில் உள்ள அல் தபகா நகரைச் சேர்ந்தவர் அலி சக்ர். வயது 20. ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதி. தற்போது ராக்கா நகரில் வசித்து வருகிறான். அவரது தாய் ராக்கா நகரில் கூலி வேலை பார்த்து பிழைத்துக் கொண்டிருந்தார்.

ஒருநாள் அந்த தாய் அலியிடம்‘‘வெளிநாட்டு படைகள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் அனைவரையும் கொன்றுவிடுவார்கள். அதனால் அதில் இருந்து வெளியே வந்துவிடு. சொந்த ஊருக்கு சென்றுவிடுவோம்’’ என்று கூறினார். இதை அலி சக தீவிரவாதிகளிடம் தெரிவித்தார். இதற்கான அலியின் தாயை தீவிரவாதிகள் கைது செய்தனர். அலியின் தாய்க்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இன்று ராக்கா நகர் தபால் நிலைய அலுவலகம் அருகே மக்கள் முன்பு அலியின் கையால் அவரின் தாயை தூக்ககிட்டு கொலை செய்ய வைத்தனர். கடந்த ஒன்றரை வருடத்தில்  சிரியாவில் 2 ஆயிரம் பேருக்கு  ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் மரண தண்டனை நிறைவேற்றியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.