திண்டுக்கல்: பிரமோற்சவத்திற்கு 6 டன் பூக்கள் திருப்பதி செல்கிறது!

திண்டுக்கல்:

புரட்டாசி மாதம் திருப்பதி வெங்கடேஷபெருமாளின் பிரமோற்சவத்திற்காக திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து 6 டன் பூக்கள் அனுப்பப்படுகிறது.

flowr1

திருப்பதி கோவிலில் ஆண்டுதோறும் நடக்கும் பிரம்மோற்சவ விழாவுக்கு திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து டன் கணக்கில் பூக்கள் அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டும் வழக்கம் போல் பூக்கள்  திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் இருந்து மலர்கள் பெறப்பட்டு திருப்பதிக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.

பழனியில் செயல்படும் புஷ்பகைங்கரிய சபா  என்ற அமைப்பு  இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. செண்டுமல்லி, வாடாமல்லி, விருச்சிப்பூ, தாமரை, அரளி மேரிகோல்டு உள்ளிட்ட பூக்கள் பஸ் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.

முதல்நாளான நேற்று 630 கிலோ பூக்கள் அனுப்பி வைக்கப்பட்டதாகவும்,  தொடர்ந்து 10 நாட்களுக்கு மொத்தம் 6 டன் பூக்கள் அனுப்பி வைக்கப்படும் என்று  புஷ்பகைங்கரிய சபாவை சேர்ந்தவர் கூறினார்.

திருப்பதி பிரம்மோற்சவத்திற்கு வழக்கமாக பழனியில் இருந்து பூக்களை அனுப்பி வைப்போம். ஆந்திர பஸ்கள் வராததால் இந்த முறை திண்டுக்கல்லில் இருந்து அனுப்பி வைக்கிறோம்.

திருப்பதி கோவிலில் உள் அலங்காரம், வெளி அலங்காரம், சுவாமி அலங்காரத்திற்கு இந்த பூக்கள் பயன்படுத்தப்படும் என்றார்.

கார்ட்டூன் கேலரி