திமுகவுக்கு போவதைவிட தூக்கில் தொங்கலாம்: முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் காட்டம்

சென்னை:

முன்னாள் மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், திமுகவுக்கு தாவுகிறார் என்று செய்திகள் பரவிய நிலையில், அதை மறுத்துள்ள நத்தம் விஸ்வநாதன், திமுகவுக்கு  போவதைவிட தூக்கில் தொங்கலாம் என்று காட்டமாக தெரிவித்து உள்ளார்.

முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்

”சுயமரியாதையை விற்று, அந்த ஈனப் பிழைப்பு பிழைப்பதற்கு பதில் தூக்கில் தொங்கலாம் என்றவர், தான்  ஒருபோதும் நான் திமுக பக்கம் போகமாட்டேன்” என தன்னை பற்றி வரும் வதந்தி முற்றிலும் தவறானது என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி நேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த நிலையில், அதிமுகவில் இருந்து ஓரங்கட்டப்பட்டு உள்ள முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனும்  விஸ்வநாதன் திமுகவுக்கு தாவ இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தன.

மேலும் டிடிவி தினகரன் அணியில் உள்ள தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள பல எம்எல்ஏக்களும் திமுகவுல் ஐக்கியமாக தூது விட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது இதன் காரணமாக அதிமுக மற்றும் அமமுகவில் பரபரப்பு நிலவி வந்த நிலையில் நத்தம் விஸ்வநாதன் மறுப்பு தெரிவித்து உள்ளார்.

கார்ட்டூன் கேலரி