திமுக அதிக இடங்களை கைப்பற்றும்- நியூஸ் நேஷன் கருத்து கணிப்பு

newsnation

அதிமுக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் என இந்தியா டிவி மற்றும் சி-வோட்டர் நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் தகவல் வெளியானாலும், அதன் வாக்கு சதவீதம் இந்த தேர்தலில் சரியலாம் என்று கருதப்படுகிறது.

இந்த நிலையில் நியூஸ் நேஷன் என்கிற மற்றொரு தொலைக்காட்சி நடத்திய கருத்துக் கணிப்பில் திமுக அதிக இடங்களைக் கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது.

10000 பேரிடம் நடத்திய ஆய்வு முடிவின் அடிப்படையில் இந்த கருத்துக் கணிப்பு நடைபெற்றதாக நியூஸ் நேஷன் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. அதில் திமுக 107 இடங்கள் முதல் 111 இடங்கள் வரை கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக 103 இடங்களிலிருந்து 107 இடங்களைக் கைப்பற்றும் என்றும், மக்கள் நலக் கூட்டணி 14 இடங்களிலிருந்து 18 இடங்கள் வரை பெறும் என்றும், மேலும் பாஜக ஒரு தொகுதி கூட கைப்பற்ற வாய்ப்பில்லை என்றும் நியூஸ் நேஷன் கருத்துக் கணிப்பு கூறியுள்ளது.

கார்ட்டூன் கேலரி