திமுக ஆட்சிக்கு வந்தால்தான் மதுபான ஆலைகள் மூடப்படுமாம்!

beer

திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி சேலத்தில் தனது முதல்கட்ட தேர்தல் பிரச்சாரத்தை நேற்று திங்கள்கிழமை தொடங்கினார்.

சூரமங்கலம் உழவர் சந்தை அருகில் சேலம் மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் பன்னீர்செல்வத்தை ஆதரித்து அவர் பேசியபோது, ‘’அதிமுக ஆட்சியில் 6,800 மதுக்கடைகள் திறந்ததுதான் சாதனையாக உள்ளது. திமுக ஆட்சியில் ரூ.16,000 கோடியாக இருந்த மதுக்கடை வருவாய், அதிமுக ஆட்சியில் ரூ.36,000 கோடியாக உயர்ந்துள்ளது. அந்த வகையில் டாஸ்மாக் கடைகள் அதிகரித்துவிட்டதால், குடிக்கும் பழக்கமும் அதிகரித்துள்ளது. டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டுமெனில், திமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்தால் மதுபான ஆலைகள் மூடப்படும்’’என்று தெரிவித்தார்.