திமுக வேட்பாளர் பட்டியலில் 50 பேர் புதுமுகங்கள்

 

Karunanidhi-Stalin
சட்டசபை தேர்தலில் தி.மு.க. போட்டியிடும் 173 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியல் நேற்று மாலை வெளியிடப்பட்டது. 19 பெண்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த முறை தி.மு.க. சார்பில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டிருப்பவர்களில் 50 பேர் புதுமுக வேட்பாளர்கள். முன்னாள் அமைச்சர்களான துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு உள்ளிட்ட 20 பேருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மறைந்த என்.வி.என். சோமுவின் மகள் டாக்டர் எஸ்.என்.கனிமொழி, ஆலடி அருணா மகள் பூங்கோதை மற்றும் தூத்துக்குடி பெரிய சாமியின் மகள் கீதா ஜீவன், ஐ. பெரியசாமியின் மகன் செந்தில்குமார், சுப.தங்கவேலன் மகன் சுப.த. திவாகரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளின் வாரிசுகளுக்கும் சீட் கொடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர்களான பேராசிரியர் க.அன்பழகன், ஆற்காடு வீராசாமி, என்.செல்வராஜ், தமிழரசி, கோ.சி.மணி, உபயதுல்லா, பொங்கலூர் பழனிச்சாமி உள்ளிட்ட 9 முன்னாள் அமைச்சர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.