திரிபுரா சட்டசபை தேர்தல் பிரசாரம் :  2 முறை சுற்றுப்பயணம் செய்யும் மோடி

கர்தலா

பிப்ரவரி மாதம் 18ஆம் தேதி நடைபெற உள்ள திரிபுரா மாநில சட்டமன்ற தேர்தல் பிரசாரத்துக்கு மோடி இரண்டு முறை சுற்றுப்பயணம் செய்ய உள்ளார்.

திரிபுரா சட்டமன்ற தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 18 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.   முடிவுகள் மார்ச் 3 ஆம் தேதி அன்று வெளியாக உள்ளது.   இந்த தேர்தலை  முன்னிட்டு பிரசாரம் ஏற்கனவே துவங்கி உள்ளது.   மத்திய அமைச்சர்களும் பாஜக பிரமுகர்களும் பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர்.

பிரதமர் மோடி இரண்டு முறை சுற்றுப்பயணம் செய்ய உள்ளார்.  வரும் பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி அன்று நடைபெறும் பொதுக்கூட்டங்களிலும்,  மீண்டும் பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி அன்று ஒரு பொதுக்கூட்டத்திலும் பங்கு பெறுகிறார்.

மோடியைத் தவிர ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், சுஷ்மா ஸ்வராஜ் ஆகிய மத்திய அமைச்சர்களும்,  உத்திர பிரதேசத்தில் இருந்து முதல்வர் யோகி ஆதித்ய நாத் ஆகியோரும் பிரசாரத்தில் கலந்துக் கொள்ள உள்ளனர்.