திருமா, முத்தரசன் மாங்கா மடையன்!  : ஜெயா டிவி கீழ்த்தரம்

1

ளுங்கட்சியான அதி.மு.க. ஆதரவு  ஜெயா டிவியில் தொடர்ந்து தேர்தல் பிரச்சாரம் பலவிதங்களில் நடந்துவருகிறது. அதில் நகைச்சுவை என்ற பெயரில் கீழ்த்தரமான நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பாகின்றன.

இன்று இரவு 10 மணி முதல் 10.30 வரை இப்படி ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பானது.  வைகோ போசும்போது, மேடையிலேயே முத்தரசனும், திருமாவளவனும் தூங்கிய காட்சி ஒளிபரப்பப்பட்டது.

பின்னணியில் “ஒரு வித்துவான் வாசிக்கிறேன்.. ஒரு மாங்கா மடையன் தூங்கறான்” என்ற சினிமா நகைச்சுவை வசனம் ஒலிபரப்பானது.

பிற கட்சிகளை விமர்சிக்க எத்தனையோ விசயங்கள் இருக்கும்போது இது போன்ற கீழ்த்தரமான தனிநபர் தாக்குதல்கள் தேவையா என்பதை ஜெயா டிவி நிர்வாகம் சிந்திக்க வேண்டும்.