திருவாரூர் இடைத்தேர்தல்: விண்ணப்பங்களை பெறுவது குறித்து அதிமுக அறிக்கை

சென்னை:

ருணாநிதி மறைவை தொடர்ந்து காலியாக உள்ள திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், அதிமுக சார்பில் இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பு கிற தொண்டர்கள்  கட்சி தலைமை அலுவலகத்தில் விண்ணப்பப்படிவங்களை பெற்றுக் கொள்ள லாம் என்று  அதிமுக தலைமை அறிவித்துள்ளது

ஜனவரி 28ந்தேதி திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. அதைத்தொடர்ந்து அரசியல் கட்சிகள் விறுவிறுப்பாக தங்களது பணிகளை தொடங்கி உள்ளன.

திமுக சார்பில், திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் தேர்வு நேரகாணல்  ஜனவரி 4ம் தேதி நடைபெறும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில்,  அதிமுக சார்பில் போட்டியிட விரும்புகிற தொண்டர்கள் நாளை கட்சி தலைமை அலுவலகத்தில் விண்ணப்பப்படிவங்களை பெற்றுக்கொள்ளலாம் என்று  அதிமுக  தலைமை அறிவித்துள்ளது.

இதுகுறித்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான  ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரான முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவாரூர் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புகிற தொண்டர்கள் 2-ந்தேதி (நாளை) காலை 9.30 மணி முதல் 3-ந்தேதி வரை கட்சியின் தலைமை அலுவலகத்தில் விண்ணப்பத்தொகையான ரூ.25 ஆயிரம் செலுத்தி, விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை 4-ந்தேதி நடைபெறும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.