தி.மு.க.வுக்கு அனுதாபம் தேட கருணாநிதியையே….! :

chennai-dmk-chief-m-karunanidhi-blesses-his-son-274005

அரசியல் விமர்சனம் என்பது, தனிநபர் தாக்குதல்களாகி பலகாலமாகிவிட்டன.  அதற்கு ஒரு சோக சாட்சியாக இருக்கிறது  அ.தி.மு.கவின் அதிகாரபூர்வ நாளேடான (09.02.2016 தேதியிட்ட) “ dr  நமது எம்.ஜி.ஆர்.” நாளிதழ்.

“சூழ்ச்சிக்கார புள்ளகிட்ட சூதானமா இருக்கணும்…” என்ற தலைப்பில் சித்திரகுப்தன் என்பவர் எழுதியிருக்கும் கட்டுரையில் “கருணாநிதி படத்திற்கு நேராக முடியட்டும் முடியட்டும் என்றும், மு.க.ஸ்டாலின் படத்திற்கு மேலே விடியட்டும் விடியட்டும் என்ற வாசகங்கள் பளபளக்கும்.

அப்படியானால் இந்த நடைபயணத்தின் இறுதி டார்கெட் எதைச் சொல்கிறது?

எதுக்கும் கருணாநிதி சூதானமாக இருப்பது நல்லது. தேர்தல் காலம் அல்லவா..! தேறாத, தி.மு.க.வுக்கு அனுதாபம் தேட கருணாநிதியையே பகடைக்காயாக்கிவிடப் போகிறது அந்த நயவஞ்சகக் கும்பல்” என்று எழுதப்பட்டிருக்கிறது.

என்னதான் மாற்றுக்கருத்துக்கள் இருந்தாலும், விமர்சிப்பதில் எல்லை வகுத்துக்கொள்ள வேண்டாமா?  பிறர் மீது அவதூறு வழக்குகளை வரிசையாக தொடுக்கும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாதான் இந்த நாளிதழின் நிறுவனர்!

Dr  நமது எம்.ஜி.ஆர். நாளிதழில் வெளியான அந்த கட்டுரை:

“உயிருக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் புற்று நோய், ஆஸ்துமா போனஅறவற்றைவிட கொடுமையனது..

மீத்தேன், கெயில் என்ற அரக்கர்களைக் காட்டிலும் ஆபத்தானது..

காற்றிலே பரவும் விஷத்திற்கு ஈடானது.. கருணாநிதி வழிநடத்துகிற தி.மு.க. என்பது தமிழக மக்களுக்கு தெளஅளத்தெளிவாக புரிந்துவிட்ட காரணத்தால்தான், இன்றைக்கு அந்த கட்சி எதிர்க்கட்சிக்கும் வக்கற்றதாகி வரப்போகும் தேர்தலோடு திக்கற்று அழிவதற்கு தீயாய் விரைந்து கொண்டிருக்கிறது.

அந்த நடைபிணத்தை தனது நடை பயணத்தால் தூக்கி நிறுத்திவிடுவேன் எந்று ஒரு செத்த பிணத்திற்கு ரத்த தானம் செய்ய முயற்சிக்கிறார் ரத்தம் சுண்டிப்போன மு.க. ஸ்டாலின்!

தினம் ஒரு கூத்து, வேளைக்கு ஒரு வேஷம்.. என்று “நமக்கு நாமே” காமெடி நாடகத்தை நடத்தி வரும் அவர்தான், இன்றைய ஒட்டுமொத்த தமிழக இளைஞர்களுக்கும் பொழுதுபோக்கே!

இப்போதுதான் பூமிக்கே புறப்பெடுத்து வந்த வேற்று கிரகத்துவாசிபோல, வயல்காட்டிற்குள் சிமெண்ட் பாதை போட்டு நடந்து போவார்! அதுவும், 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஷூ போட்டு!

நெல் நாற்றுகளை கையில் வாங்கி, இதுதான் அரிசி விளையும் மரமா என்று அதிசயமாக கேட்பார்.

நட்சத்திர ஹோட்டல்களில் இருந்து விலை உயர்ந்த பிளாஸ்கில் கொண்டுவரப்பட்ட டீயை, கண்ணாடி கிளஆசில் ஊற்றி கையில் வைத்துக்கொண்டு முச்சந்தி கடையில் டீ குடிப்பதாக மோசடி நாடகமும் போடுவார்!

4b

ஆட்டோக்களில் தொங்குவார்! ஆயாக்களை கொஞ்சுவார்! ஆணஅகள் என்றால் மட்டும் “பளார்” என்று அறைவிடுவார்!

பள்ளி, கல்லூரிகளக்கு நுழைவதற்காகவே பிரத்தியேக கோட்டு சூட்டுகள் மாட்டிக்கொள்வார். ஏதோ  அமெரிக்க ஆக்ஸ்போர்டில் டாக்டரேட் வாங்கியவர் போல அள்ளியும் விடுவார்!

மீத்தேனுக்கும், கெயிலுக்கும் விளைநிலங்களை ஒப்பந்தம் போட்டுக்கொடுத்த இந்த துரோகியே விவசாயிகளை காப்பேன் என்று உறுதியும் கொடுப்பார்!

வால்மார்ட்டுக்கு ஆதரவாக தனஅ கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களைவாக்களிக்க வைத்த இந்த நல்லவரே(?) கோயம்பேட்டு வியாபாரிகளிடம் நின்று கொண்டு மொத்த காய்கறிகளையும் பன்னாட்டு நிறுவனங்கள் கொள்முதல் செய்து விற்றுவிடுகிறார்கள் என்று ஊளையிடுவார்!

இப்படியான பித்தலாட்டத்தை நடத்தி வருபவர் இந்த செட் –டப் கூட்டங்களுக்காக செலவழித்த ஸ்பெக்ட்ரம் தொகை மட்டுமே இதுவரை 500 கோடியாம்!

அலங்காரம்  செய்துகொண்டு கையிலுள்ள பேப்பரை பார்த்து வரி விடாமல் வாசித்து நடிப்பா ர். அதனை ஊடகங்கள் படம் பிடித்து ஒளிபரப்பு செய்யும். அந்த மேடையின் பின்னே கருணாநிதி படத்திற்கு நேராக முடியட்டும் முடியட்டும் என்றும், மு.க.ஸ்டாலின் படத்திற்கு மேலே விடியட்டும் விடியட்டும் என்ற வாசகங்கள் பளபளக்கும்.

அப்படியானால் இந்த நடைபயணத்தின் இறுதி டார்கெட் எதைச் சொல்கிறது?

எதுக்கும் கருணாநிதி சூதானமாக இருப்பது நல்லது. தேர்தல் காலம் அல்லவா..! தேறாத, தி.மு.க.வுக்கு அனுதாபம் தேட கருணாநிதியையே பகடைக்காயாக்கிவிடப் போகிறது அந்த நயவஞ்சகக் கும்பல்! வெட்கம்! வெட்கம்!

–    சித்திரகுப்தன்”

–  இவ்வாறு dr  நமது எம்.ஜி.ஆர். கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.