துருக்கியில் மனித வெடிகுண்டு தாக்குதல்: 20 பேர் பலி

turkey

அங்காரா:

துருக்கி தலைநகர் அங்காரா பகுதியில் நடந்த இரு மனித வெடிகுண்டு தாக்குதலில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
அங்காரா நகரின் மத்திய பகுதி ரயில் நிலையத்தின் அருகே ஹிப்ட்ரோம் என்ற தெருவில் இன்று காலை அமைதி பேரணி நடைபெறவுதாக இருந்தது.

துருக்கி அரசு குர்தீஷ் பயங்கரவாதிகளுடன் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டுமென கோரிக்கை விடுத்து அந்த நாட்டை சேர்ந்த வர்த்தக அமைப்பு ஒன்று இந்த பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்தது. பேரணிக்காக அங்கு மக்கள் திரண்டிருருந்தனர். அப்போது, துருக்கி நேரப்படி காலை 10 மணிக்கு இரு மனித வெடிகுண்டுகள் அங்கு தாக்குதல் நடத்தினர்.
இதில் 20 பேர் பலியாயினர். சுமார் 100 பேர் காயமடைந்தனர். தகவலறிந்த மீட்பு குழுவினர் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்த்தனர். இறந்தவர்ளின் உடல்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. இந்த தாக்குதலுக்கு துருக்கி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதல் காரணமாக அங்கு பதட்டம் நிலவுகிறது. முக்கிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. தற்கொலைப் படை தீவிரவாதிகள் இத்தாக்குதல்களை நடத்தியிருருப்பதாக துருக்கி அரசு கூறியுள்ளது. இது குறித்த விசாரணைகக்கு துருக்கி அரசு உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.