தூத்துக்குடியில் கைது செய்யப்பட்ட 65 பேரையும் விடுதலைசெய்ய நீதிபதி அதிரடி உத்தரவு

தூத்துக்குடி:

தூத்துக்குடியில் நடைபெற்ற வன்முறை மற்றும் துப்பாக்கி சூடு காரணமாக 13 பேர் பலியான நிலையில், மேலும் பலரை கலவரம் செய்ததாக போலீசார் கைது செய்தனர்.

இன்று அவர்களை கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். இதுகுறித்து விசாரணை நடத்திய மாவட்ட நீதிபதி சுகாசினி, கைது செய்யப்பட்ட 65 பேரையும் உடனே விடுதலை செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டார்.

தூத்துக்குடி கலவரத்தை  கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்ற வருகிறது. இந்த வேளை யில்,  நேற்று வீடு வீடாக சென்ற போலீசார் ஆண்களையும்,  இளைஞர்களையும் இழுத்து சென்ற நிலையில், அவர்களில் 65 பேரை கைது செய்து, இன்று  அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைக்க திட்டமிட்டு இருந்தனர்.

ஆனால், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பொதுமக்கள் 65 பேரையும்  உடனடியாக விடுதலை செய்ய மாவட்ட நீதிமன்ற நீதிபதி சுகாசினி  அதிரடியாக போலீசாருக்கு உத்தரவிட்டார்.