தூத்துக்குடி துப்பாக்கிச் சூடுக்கு மோடி மவுனம் ஏன்?….காங்கிரஸ்

டில்லி:

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் இறந்தும் பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்? என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

இது குறித்து காங்கிரஸ் மூத்த நிர்வாகி அபிஷேக் சிங்வி கூறுகையில், ‘‘தூத்துக்குடியில் நடக்கும் சம்பவங்களை பிரதமர் பார்த்து கொண்டு தானே இருக்கிறார். கோஹ்லி அளித்த சவால் குறித்து மோடியால் பேச முடிகிறது. தூத்துக்குடி விஷயத்தில் மவுனம் காப்பது ஏன்?. இச்சம்பவத்துக்கு ஒரு அதிகாரி கூட சஸ்பெண்ட் செய்யப்படவில்லை. தமிழக அரசு நம்பிக்கை இழந்து விட்டது

மக்களிடம் பேச பிரதமருக்கு நேரமில்லையா?. ஸ்டெர்லைட், பெட்ரோல், டீசல் விலை குறித்து பேச மறுப்பது ஏன்?.
ஸ்டெர்லைட் வேண்டாம் என்ற வேறு சில மாநில மக்களின் கோரிக்கையை ஏற்றது போல, தூத்துக்குடி மக்கள் கோரிக்கையை ஏற்க மறுப்பது ஏன்?.’’ என்றார்.