தென் கொரியா மீது கழிவு யுத்தம் நடத்தும் வட கொரியா

south korea

சியோல்:

தென் கொரியாவுக்கும் வட கொரியாவுக்கும் ஏழாம் பொருத்தம். இரு நாடுகளும் முட்டி மோதிக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில், கடந்த சில நாடகளுக்கு முன் தென் கொரியா ஹைட்ரஜன் குண்டு சோதனையை நடத்தியது. இது வட கொரியாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் நூதன போரை வட கொரியா மேற்கொண்டு வருகிறது.

காஸ் நிரப்பப்பட்ட ராட்சத பலூனில் எதிர்ப்பு வாசகங்களை எழுதி எல்லை பகுதியில் பறக்கவிடுகிறது வட கொரியா. அந்த பலூனில் உள்ளே மனித கழிவுகளான சிகரெட் துண்டுகள், பயன்படுத்தப்பட்ட கழிவறை டிஸ்யூ பேப்பர் ஆகியவற்றை நிரப்பி பறக்கவிடுகிறது.

இந்த பலூன்கள் சில வற்றில் மெல்லிய அளவில் பலூன் வெடிக்கும் அளவுக்கு ரசாயனங்களை தடவி, டைமர்களையும் பொறுத்தியுள்ளனர்.

தென்கொரியா எல்லையை அந்த பலூன் அடைந்தவுடன் வெடித்து சிதறும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. தென் கொரியா அதிபர் பார்க் ஜியூன் ஹைக்கு எதிரான வாசகங்களும் அந்த பலூன்களில் எழுதப்பட்டுள்ளது.

‘‘கடந்த ஜனவரி 2ம் தேதி முதல் மில்லியன் கணக்கில் இது போன்ற பலூன்களை தினமும் அனுப்புகிறது. வெடிக்காத பலூன்களும் கைப்பற்றப்பட்டுள்ளது. எல்லைப் பகுதியில் கைப்பற்றப்படும் இந்த பலூன்களில் மனித கழிவுகளான சிகரெட் துண்டுகள், டிஸ்யூ பேப்பர்கள் உள்ளன. இது மழுங்கிய வகையிலான பிரச்சாரம்’’ என தென் கொரியாவின் ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.