Random image

தேமுதிகவின் முடிவு : ஸ்டாலின் கருத்து

mk_stalin
சென்னை கோபாலபுரத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை செய்தியாளர்கள் சந்தித்தனர். அப்போது, மக்கள் நலக்கூட்டணியில் தேமுதிக இணைந்தது குறித்து கருத்து கேட்டனர். அதற்கு, ’’தேமுதிக – மக்கள் நலக்கூட்டணியால் திமுகவிற்கு எந்த பாதிப்பும் இல்லை. எங்கள் தேர்தல் பணியை நாங்கள் தொடர்ந்து மேற்கொள்வோம். இன்னும் ஓரிரு நாளில் திமுக கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கும்’’ என்று தெரிவித்தார்.