தேமுதிக தொண்டர்களுக்கு விஜயகாந்த் விடுத்துள்ள வேண்டுகோள்

Captain-New1

தேமுதிக-மக்கள் நலக் கூட்டணியின் தேர்தல் சிறப்பு மாநாடு வருகிற 10 ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம், மாமாண்டூரில் நடைபெறவிருக்கிறது.

இது தொடர்பாக விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில், ‘’தமிழக அரசியலில் மக்கள் விரும்பும் மாற்றத்தை உருவாக்க அமைந்திருக்கும் நமது வெற்றிக் கூட்டணியான தேமுதிக – மக்கள் நலக்கூட்டணியின் சார்பில் வருகிற 10-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று மாலை 4 மணியளவில் காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு அருகே மாமண்டூரில் “தேர்தல் சிறப்பு மாநாடு” நடைபெறவுள்ளது. அதில் நானும், நமது கூட்டணி கட்சிகளின் தலைவர்களான மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, சி.பி.ஐ (எம்) மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், சி.பி.ஐ. மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் ஆகியோர் கலந்துகொண்டு எழுச்சியுரையாற்ற இருக்கிறோம்.

அச்சமயம் நமது தேமுதிக – மக்கள் நலக்கூட்டணியின் அனைத்து கட்சிகளின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளைக்கழக நிர்வாகிகள், மகளிரணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என அனைவரும் தாங்கள், தங்கள் குடும்பத்தினரோடும், நண்பர்களோடும் நாட்டு நலனில் அக்கறைகொண்ட நல்லவர்களோடும் அணிதிரண்டு வந்து மாநாட்டை வெற்றி பெற செய்திட வேண்டும்’’ என வலியுறுத்தியுள்ளார்.