தேமுதிக மக்கள் நலக்கூட்டணியில் எந்த கட்சிக்கு எந்த தொகுதி என்பதை விஜயகாந்த் இன்று அறிவிக்கிறார்.

yy

தேமுதிக மக்கள் நலக்கூட்டணியில் உள்ள 6 கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பதில் கடந்த சில நாட்களாக இழுபறி நீடித்து வந்தது. இதனை முடிவுக்கு கொண்டு வர சென்னை கோயம்பேட்டிலுள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தேமுதிக இளைஞரணி செயலாளர் சுதீஷ், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஜி.ராமகிருஷ்ணன், தொகுதிப்பங்கீடு சுமூகமாக நடைபெற்று முடிந்து விட்டதாகவும் ஒதுக்கப்பட்ட தொகுதிகளை இன்று பிற்பகலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவிப்பார் எனவும் தெரிவித்தார்.

தேமுதிக-மக்கள் நலக்கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமாகாவிற்கு ஒதுக்கப்பட்டுள்ள 26 தொகுதிகளின் பெயர்கள் முடிவு செய்யப்பட்டுவிட்டதாகவும், தொகுதிகளின் பெயர்கள் இன்று அறிவிக்கப்படும் எனவும் அக்கட்சியின் மூத்த தலைவர் ஞானதேசிகன் தெரிவித்தார்.

கார்ட்டூன் கேலரி