தேர்தலில் போட்டியிடவில்லை: குஷ்பு அறிவிப்பு

download
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செய்தித்தொடர்பாளர் குஷ்பு, மயிலாப்பூர் தொகுயில் போட்டியிடுவார் என்று பரவலாக பேச்சு அடிபட்டது. அதற்கேற்ப  குஷ்பு இல்லம் அமைந்துள்ள மயிலாப்பூர் தொகுதியில் அவர் போட்டியிட வேண்டும் என்று அவர் பெயரில் காங்கிரஸ் கட்சியினர் பலர், விருப்ப மனுக்கள் தாக்கல் செய்தனர்.

தற்போது, தி.மு.க. கூட்டணியில் மயிலாப்பூர் தொகுதியை காங்கிரஸ் கட்சி பெற்றுள்ளது. எனவே குஷ்பு அத் தொகுதியில் போட்டியிடுவது உறுதி என செய்தி பரவியது.

ஆனால் குஷ்பு, ‘ஒவ்வொரு தேர்தலின் போதும் நான் போட்டியிட போவதாக யூகங்களின் அடிப்படையில் செய்திகள் வெளியாகின்றன.  இப்போதும் அதுபோல செய்தி வெளியாகியிருக்கிறது. ஆனால் அது உண்மை அல்ல.நான் தேர்தலில் போட்டியிட போவது இல்லை’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

You may have missed