தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தமிழ்நாடு வந்துவிட்டது

TNEC2

நேற்று மாலை 3 மணியளவில், தேர்தல் ஆணையம் 2016 தமிழ்நாட்டிற்கான சட்டசபை தேர்தல் மே 16 ம் தேதி நடைபெற உள்ளதாக அறிவித்தது. தேர்தல் நடத்தை உடனடியாக அமலுக்கு வந்துவிட்டது, மற்றும் மாநில நிர்வாகமும் தேர்தல் ஆணையத்தின் கீழ் வந்துவிட்டது.

புதிய சட்டசபை அமையும் வரை, அதிமுக ஆட்சி இப்பொழுது ஒரு பாதுகாவல் அரசாங்கத்தின் பங்கை மட்டுமே வகிக்கும். மே 22 ம் தேதிக்குள் புதிய அரசாங்கம் பதவி பிரமாணம் செய்து கொள்ளவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.