த.மா.கா பொதுசெயலாளர் காங்கிரஸில் இணைகிறார்

mp vis

தமாகா பொது செயலாளரும் காஞ்சிபுரம் முன்னாள் எம்.பியுமான விசுவநாதன் தமாகாவில் இருந்து வெளியேறினார். அவர், , “நான் காங்கிரஸில் இணைவதற்கு தமாகா தான் வழி வகுத்துள்ளது. வெற்றிக்கூட்டணியில் தான் தமாகா இருக்கும் என்று வாசன் கூறினார் ஆனால் அது நடைபெறவில்லை. நாங்கள் ம.ந.கூ – தேமுதிக தலைமையை ஏற்கவில்லை. வாசன் இப்படி ஒரு முடிவை எடுப்பார் என்று நாங்கள் எதிபார்க்கவில்லை. என்னை போல் ஒத்தகருத்துடைய பலர் தமாகாவில் இருந்து வெளியேற உள்ளனர். நாங்கள் அனைவரும் ஒன்று கூடி விரைவில் காங்கிரஸில் இணைய உள்ளோம்” என்று அவர் தெரிவித்தார்.