நக்சல் மாநிலங்களில் தினமும் 400 ஜிபி டேட்டா பயன்பாடு!!

டில்லி:

நக்சல்கள் ஆதிக்கம் உள்ள 9 மாநிலங்களில் கடந்த ஆண்டில் மட்டும் பிஎஸ்என்எல் 2ஜி இன்டர்நெட் சேவையில் மாதத்துக்கு 400 ஜிபி பயன்படுத்தப்பட்டிருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து பிஎஸ்என்எல் தலைவர் அனுபம் ஸ்ரீவத்சவா, விஎன்எல் நிறுவன தலைவர் ராஜீவ் மெஹ்ரோத்ரா ஆகியோர் கூட்டாக நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ 9 மாநிலங்களில் நக்சல் ஆதிக்கம் பகுதிகளில் பிஎஸ்என்எல் மற்றும் விஹான் நெட்ஒர்கும் இணைந்து இணையதள சேவையை அளித்து வருகிறது. இதற்க £ன செல்போன் டவர்கள் அமைக்க 2013ம் ஆண்டு மத்திய அரசு அனுமதி வழங்கியது. 2016 டிம்பரில் 2 ஆயிரத்து 199 சோலார் மின் சக்தி கொண்ட செல்போன் டவர்கள் அமைக்கப்பட்டது.

மத்திய பிரசேதம், சட்டீஸ்கர், ஆந்திரா, பீகார், ஜார்கண்ட், மகாராஷ்டிரா, மேற்குவங்கம், ஒடிசா, உ.பி. ஆகிய 9 மாநிலங்கள் நக்சல ஆதிக்கம் மிகுந்த மாநிலமாக அரசால் அடையாளம் காணப்பட்டுள்ளது. 2016ம் ஆண்டு இந்த மாநிலங்களில் மட்டும் தினசரி 400 ஜிபி டேட்டா பயன்படுத்தப்பட்டுள்ளது’’ என்றனர்.

மேலும், அவர்கள் கூறுகையில், ‘‘உலகளவில் மிகப்பெரிய பசுமை மொபைல் நெட்ஒர்க் வாய்ஸ் மற்றும் டேட்டாவை 20 ஆயிரம் கிராமங்களுக்கு பிஎஸ்என்எல் வழங்கி வருகிறது. கிராமங்களிலும் தற்போது டேட்டா பயன்பாடு அதிகரித்து வருகுறது. வங்கி உள்ளிட்ட இதர செயலிகளுக்கு அதிகளவில் டேட்டா பயன்ப டுத்தப்படுகிறது ’’ என்றனர்.