நடிகைகள் ஒன்றும் தெரியாதவர்களா?: வெடிக்கும் அனுஷ்கா சர்மா,

Anushka-Sharma-Likes-And-Dislikes

 

னுஷ்கா சர்மாவுக்கு எந்த ஹீரோ மீது என்ன கோபமோ.. சமீபத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் பொறிந்துதள்ளிவிட்டார்.

‘‘தைரியமான பெண்ணை திரை உலகில் யாருக்கும் பிடிப்பதில்லை. இந்தியாவில் எல்லோரது ரசனையும் ரொம்ப சாதாரணமாக இருக்கிறது. அதனால்தான் தகுதியே இல்லாத பலரால் இங்கு நட்டத்திரங்களாக உலாவர முடிகிறது.

திரையுலகில் நாம் நமக்குத் தகுதியானதைக் கேட்டாலே திமிர் பிடித்தவர்களாக முத்திரை குத்திவிடுகிறார்கள்.

 

anushka-sharma-net-worth

நடிகைகளான நாங்கள் ஒன்றும் முட்டாள்களோ, விவரம் தெரியாதவர்களோ கிடையாது. எங்களுக்கும் மனம் இருக்கிறது, அறிவு இருக்கிறது. நாங்கள் கூறும் ஆலோசனைக்கும் உரிய முக்கியத்துவம் தர வேண்டும்.

ஒரு படத்தில் ஹீரோயினுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கிறது என்றால் ஹீரோக்களுக்கு தாங்கிக்கொள்ள முடியவில்லை.

ஹீரோவுக்கும் ஹீரோயின்களுக்கும் சம்பள வேறுபாடும் அதிகமாக இருக்கிறது.

ஆண்களுக்குத்தான் அதிக செலவு இருக்கிறது, அவர்கள்தான் ஒரு குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பது போலவும், பெண்கள் எல்லாம் ஆண்களின் சம்பாத்தியத்தில்தான் வாழ்கிறார்கள் என்பதைப் போல இருக்கிறது இன்த சம்பள விசயம்” என்று விளாசித்தள்ளிவிட்டார் அனுஷ்கா.

Anushka-Sharma-Upcoming-filmsBirthday-dateAffairs

கடைசியாக, விராட் உடனான காதல் குறித்து கேட்டபோது, “

‘‘நானும் விராட்டும் நெருக்கமான உறவில் இருக்கிறோம். தான் கிரிக்கெட் ஆடுவதை நான் பார்க்க வேண்டும் என்று அவர் விரும்பு கிறார், அதே போல நானும் விரும்புகிறேன். அவ்வளவுதான். இதில் மற்றவர்கள் சொல்வதைப் பற்றியெல்லாம் நாங்கள் ஏன் கவலைப்பட வேண்டும்? அவர் சரியாக ஆடவில்லை என்றால், அதற்குக் காரணம் நான்தான் என்று கூறுவதெல்லாம் தவறு!” என்று பொரிந்து தள்ளிவிட்டார் அனுஷ்கா சர்மா.

பூ ஒன்று புயலானதுங்கிறது இதுதானோ…?

1 thought on “நடிகைகள் ஒன்றும் தெரியாதவர்களா?: வெடிக்கும் அனுஷ்கா சர்மா,

Leave a Reply

Your email address will not be published.