நட்சத்திர கிரிக்கெட்டில் சூர்யா அணி சாம்பியன்

surya
நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்கு நிதி திரட்டுவதற்காக, சென்னையில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி இன்று நடத்தப்பட்டது. காலை 10 மணிக்கு சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இந்த போட்டிகள் தொடங்கப்பட்டது. போட்டியை ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் தொடங்கி வைத்தார்கள். இதில், நட்சத்திர கிரிக்கெட் இறுதிப் போட்டியில் தஞ்சை வாரியர்ஸ் அணியை வீழ்த்தி சென்னை சிங்கம்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.

டாஸ் வென்ற சென்னை சிங்கம்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய தஞ்சை வாரியர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 6 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 83 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 84 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சிங்கம்ஸ் அணி களமிறங்கியது. 5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 84 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சென்னை சிங்கம்ஸ் அணி தனது அதிரடி ஆட்டத்தால் சூப்பர் வெற்றி பெற்றது.