நட்ட நடு ரோட்டில் கொலை! கண்டுகொள்ளாத மக்கள்!

11aa

வேலூர்:

ஏராளமான மக்கள் வேடிக்க பார்த்தபடி நிற்க, நடு சாலையில் நடந்த படுகொலை காட்சி வாட்ஸ் அப்பில் பரவி பரபரப்பை ஏற்படுத்திவருகிறது.

வேலூர் அதிமுக பிரமுகரும், மாநகராட்சி முன்னாள் கவுன்சிலருமான ரவி என்பவரின் தம்பி ரமேஷை  2 ஆண்டுகளுக்கு முன்பு மகா என்ற ரவுடி வெட்டி கொன்றார்.  இதையடுத்த கைது செய்யப்பட்ட  மகா சிறையில் அடைக்கப்பட்டார்.  பிறகு ஜாமீனில் வெளியே வந்த இவர், ரவியையும் கொல்ல திட்டமிட்டார்.

111

வேலூர் காகிதப்பட்டறை பகுதியில் நடந்த கிருஷ்ண ஜெயந்தி விழாவில் ரவி கலந்துகொண்டதை கேள்விப்பட்ட மகா, தனது கூட்டாளிகள் மூவருடன் வந்து ரவியை கத்தியால் குத்தினார்.  காயத்துடன் ரவி தப்பி ஓடிவிட்டார்.

இந்த தகவல் அறிந்த ரவியின் ஆதரவாளர்கள், மகாவை சூழ்ந்துகொண்டு நடு ரோட்டில் கல்லாலேயே அடித்து துடிக்கத் துடிக்க கொன்றார்கள்.

நடு சாலையில் பலரும் பார்க்கும்படி நடந்த இந்த கொலையை யாரோ புகைப்படம் எடுத்து வாட்ஸ் அப்பில் பதி்துவிட்டார்கள். நெஞ்சை பதற வைக்கும் இந்த கொலை காட்சி வாட்ஸ் அப்பில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

3 thoughts on “நட்ட நடு ரோட்டில் கொலை! கண்டுகொள்ளாத மக்கள்!

 1. Muruganantham Ramasamy
  14 hrs · Edited ·
  வேலூரில்பகிரங்கமாகவும், குரூரமாகவும், நடந்திருக்கும் கொலையும், அது எந்தவித அச்சமுமின்றி நடந்தேறிய விதமும், தமிழகத்தில்ஜெ.ஆட்சியில் சட்டம் ஒழுங்கின் இழிநிலையை உணர்த்துகிறது.
  குண்டாயிசத்தை தனதுகட்சியினரின் அடிப்படைத்தகுதியாக அங்கீகரித்திருக்கும் தலைமையின் கீழ் காவல்துறை தனது கண்ணியத்தையும், ஆளுமையையும், இழந்துநிற்கிறது.
  சாராயக்கடைகளுக்கும், சமூகவிரோதிகளுக்கும், காவலிருக்கும் அவர்களுக்கு என்ன எஞ்சியிருக்கும்.?
  பொதுஒழுங்கை முற்றிலும் இழந்த சமூகமும்,அரசியல் ஒழுங்கை தொலைத்த ஆட்சித்தலைமையும்,
  ஒருதேசத்தின் இருண்ட எதிர்காலத்திற்கான அறிகுறிகள்..!

 2. கட்டுரைகள் முடிகின்ற இடத்திலேயே மறுமொழிகளை இடும் வசதி இருத்தல் நலம்

 3. நன்றி. எவ்வளவுக்கெவ்வளவு user friendly ஆக ஆக்கமுடியுமா அவ்வளவு நல்லது. பங்களிப்பு கூடும். கிளுகிளுப்பு விவகாரங்களைக் குறைக்கலாம். பல சுவையான விஷயங்களைத் தருகிறீர்கள். அதற்கென்றே வாசகர் வட்டம் உருவாகும். நம்புங்கள். வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published.