si

சென்னை:

“காவல் துறையினரான நாங்கள் சுதந்திரமா செயல்பட்டால், அரசியல்வாதிகள் பேட்டியே கொடுக்க முடியாது” என்று மிரட்டலாகவும், “சீக்கிரமா டிபன் சாப்புட்டு கிளம்புங்க” என்று கிண்டலாகவும் பேஸ்புக்கில் வெளிப்படையாக காவல்துறை இன்ஸ்பெக்டர் பதிவிட்டிருக்கிறார்.

காஞ்சிபுரத்தில் வாழும் எஸ்.ஐ. கே.எஸ்.மாணிக்கவேல். தமிழக காவல்துறையில் இன்ஸ்பெக்டராக பணியாற்றுகிறார். இவர் தனது முகநூல் பக்கத்தில் கடந்த 19ம் தேதி இரவு 11.47 மணிக்கு ஒரு பதிவை எழுதியிருக்கிறார். அதில்தான் அரசியல்வாதிகளை கிண்டலும், மிரட்டலுமாக கலாய்த்திருக்கிறார்.

அந்த பதிவு:

“காவல் துறை சீர்த்திருத்தம் எப்போது ? என்ற தலைப்பில் கலைஞர் TV யில் விவாதம். திமுக சார்பில் திரு சிவ.ஜெயராஜ். பாஜக சார்பில் திரு. நாராயணன்.காங்கிரஸ் சார்பில் திரு.இதயதுல்லா மூவரும் நல்லா பேசினாங்க.மூவருமே காவல்துறை சுதந்திரமாக செயல்பட வேண்டும் என பேசினார்கள்.ரொம்ப நன்றி ! நாங்க சுதந்திரமாக செயல்பட ஆரம்பித்தால் நீங்கல்லாம் பேட்டியே குடுக்கமுடியாது இங்க பேசினதை உஙக தலைவருங்க கிட்ட பேசுனா உங்கள் கட்சிய விட்டே வெளிய அனுப்பிடுவாங்க . சீக்கிரமா டிபன் சாப்பிட்டு கிளம்புங்க !!! GOOD NIGHT !!!”

  • இவ்வாறு மிரட்டலாகவும், கிண்டலாகவும் பதிவிட்டிருக்கிறார் சப் இன்ஸ்பெக்டர் கே.எஸ். மாணிக்கவேல்..

பேஸ்புக்கில் ஆர்வக்கோளாறாக முறையற்ற வகையில் தங்கள் கருத்துக்களை பதிவிடுபவர்கள் பலர் உண்டு. ஆனால் காவல்துறைில் இருப்பவர் இது போல வரம்பு மீறி பதிவிடலாமா என்ற கேள்வி எழுகிறது. பொறுப்பில் இருப்பவர்கள் கவனத்துடன் கருத்திட வேண்டும்.