நாடு கொசுத்தொல்லையால் (அமித்ஷா) அவதிப்படுகிறது: அமித்ஷாவுக்கு ஓமர் பதிலடி

ஸ்ரீநகர்:

காங்கிரஸ் கட்சியில் பிரியங்காவுக்கு பொறுப்பு வழங்கப்பட்டதை பாஜக விமர்சித்து வரும் நிலையில், காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஓமர் அப்துல்லா அமித்ஷாவுக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார்.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாஜக தேசிய தலைவர் அமித்ஷா,  காங்கிரஸைப் பொறுத்த வரை ஓஆர்ஓபி (One Rank One Pension (OROP),) என்றால் ஒரே ராகுல், ஒரே பிரியங்கா என்று கிண்டல் செய்து விமர்சித்து இருந்தார்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வரான ஒமர் அப்துல்லா, நாடு ஓடோமாஸ் (ODOMOS-overdose of only Modi only Shah) தொல்லையால் அவதிப்படுகிறது என்று பதிலடி கொடுத்துள்ளார்.

பொதுவாக கொசுத்தொல்லையில் இருந்து தப்பிக்க ஓடோமாஸ் தடவுவது வழக்கம். அதுபோல அமித்ஷா போன்றவர்களால் தேசம் நாசமாகிறது என்பதை நாசுக்காக (ஓடோமாஸ்)  கொசுவாக பாவித்து ஓமர் அப்துல்லா  பதிலடி கொடுத்துள்ளார்.

இமாச்சலப் பிரதேசத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய அமித் ஷா,  மோடி அரசு, முன்னாள் ராணுவ வீரர்களுக்காக ஒரே பதவி ஒரே ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தியதாக கூறினார். ஆனால்,  வறுமை குறித்து அதிகமாக பேசும் ராகுல், 55 ஆண்டுகளாக ஆட்சி செய்தும் கூட காங்கிரஸ் ஏன் வறுமையை ஒழிக்கவில்லை, அதற்கு பதில் சொல்ல வேண்டும் என்றார்.

மேலும்,   70 ஆண்டுகளாக ராணுவ வீரர்களைக் குறித்து காங்கிரஸ் கவலைப்படவில்லை என்று குற்றம் சாட்டியவர், மோடி ஆட்சிக்கு வந்ததும் ஒரே பதவி ஒரே ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தினார் என்று பேசியவர்,  காங்கிரஸைப் பொறுத்தவரை ஓஆர்ஓபி (ஒரே பதவி ஒரே ஓய்வூதியம்) என்றால் ஒரே ராகுல், ஒரே பிரியங்கா என விமர்சித்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான ஓமர் அப்துல்லா தேசம் கொசுத்தொல்லையால் (அமித்ஷா) அவதிப்படுவதாக டிவிட் செய்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: amithsha, odomas, Omar Abdulla, One Rank One Pension, அமித்ஷா, ஓடோமாஸ், ஓமர் அப்துல்லா, காங்கிரஸ், கொசு, பாஜக, பிரியங்கா, ராகுல் காந்தி
-=-