நான் சீமானுக்கு ஜோடியா? : குஷ்பு கண்டனம் !

சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி தமிழில் ஒரு திடைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது.   டிராபிக் ராமசாமி என்னும் பெயரிலேயே தயாரிக்கப்பட்டு வரும் இந்தப் படத்தில் டிராபிக் ராமசாமியாக நடிகர் விஜயின் தந்தையும் பிரபல இயக்குனருமான எஸ் ஏ சந்திரசேகர் நடித்து வருகிறார்.  அவர் மனைவியாக ரோகிணி நடிக்கிறார்.

மேலும் இந்தப் படத்தில் பல பிரபல நடிகர்களும் நடிகையரும் நடித்து வருகின்றனர்.   அவர்கள் பிரகாஷ்ராஜ், எஸ்.வி.சேகர், ஆர்.கே.சுரேஷ், மனோபாலா, மதன் பாப், லிவிங்ஸ்டன், இமான் அண்ணாச்சி, மோகன்ராம், சேத்தன், தரணி, சீமான்,  குஷ்பு, அம்மு ராமச்சந்திரன், அம்பிகா, கஸ்தூரி, உபாசனா, பசி சத்யா  ஆவார்கள்.   அது தவிர விஜய் ஆண்டனி ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அரசியலில் இருவேறு துருவங்கள் எனக் கூறப்படும் குஷ்புவும் சீமானும் ஜோடியாக நடிப்பதாக தகவல்கள் வெளியாகின.   அதற்கு குஷ்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.  “நான் டிராபிக் ராமசாமி படத்தில் நடிக்கிறேன்,  அதே படத்தில் சீமானும் நடிக்கிறார்.   அவ்வளவு தான்.   நானும் அவரும் ஜோடியாக நடிக்கவில்லை.   இது போல தவறான செய்திகளை வெளியிடுவது கண்டனத்துக்குறியது”  என குஷ்பு கூறி உள்ளார்.