நாய்கள் இறைச்சிக்குத் தடை : நாகாலாந்தில் சர்ச்சை

கொஹிமா

நாய்கள் இறைச்சி விற்பனைக்கு நாகாலாந்து மாநில அரசு தடை விதித்ததால் கடும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

நாகாலாந்தில் நாய் இறைச்சி உண்ணும் பழக்கம் உள்ளது.

இதற்குச் செல்லப்பிராணிகள் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தற்போது கொரோனா பரவலுக்கு இறைச்சி உணவும் ஒரு காரணம் என கூறப்படுகிறது.

நாகாலாந்து அரசு நாய்கள் இறக்குமதி வர்த்தகம் மற்றும் நாய்கள் இறைச்சி விற்பனைக்குத் தடை விதித்துள்ளது.

இந்த மாதம் 3 ஆம் தேதி விதிக்கபட்ட் இந்த தடைக்கு செல்லப் பிராணிகள் ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

அதே வேளையில் நாகாலாந்தின் பெரும்பான்மை மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஆர்வலர்கள் பலர் அரசின் இந்த உத்தரவு பாரம்பரியம் மற்றும் உணவுப்பழக்கத்துக்கு எதிரானது எனக் கருத்து தெரிவித்துள்ளனர்

இது நாகாலாந்தில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.