2                                                                        யுவராஜ்

சென்னை:

கோகுல்ராஜ் கொலை வழக்கில்  குற்றம்சாட்டப்பட்டுள்ள, தலைமறைவாக இருக்கும் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை தலைவர் யுவராஜ் நாளை  காவல்துறையினரிடம் சரணடைகிறார்.

தலித் இளைஞர் கோகுல்ராஜ் மர்மமான முறையில் தலை துண்டிக்கப்பட்டு இறந்துகிடந்தார்.  அவர், கவுண்டர் இனதைத்ச் சேர்ந்த  பெண் ஒருவரை காதலித்ததாகவும், ஆகவே, தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை தலைவரான யுவராஜ்தான் கோகுல்ராஜை கொன்றார் எனவும் வழக்கு பதியப்பட்டுள்ளது.

இதையடுத்து யுவராஜ் தலைமறைவானார். இதற்கிடையே யுவராஜை தேடும் தனிப்படைகள் ஒன்றுக்கு பெறுப்பேற்ற திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுப்ரியா தற்கொலை செய்துகொண்டார். யுவராஜை பிடிக்கும் விவகாரத்தில் உயரதிகாரிகள் டார்ச்சர் செய்ததால் அவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டது.

இதற்கிடையே தலைமறைவான யுவராஜ், வாட்ஸ் அப் மூலம் தனது கருத்துக்களை தொடர்ந்து வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்தார்.

தலைமறைவாக இருக்கும் யுவராஜை முதன் முதலாக patikai.com  இதழ் கடந்த செப்டம்பர் 8ம் தேதி, முதன் முதலாக பேட்டி எடுத்து வெளியிட்டது. “தவறுக்கு மரணதண்டனை தீர்வாகாது” என்ற தலைப்பில் வெளியானது.

இதைத் தொடர்ந்து தனியார் தொலைக்காட்சி  ஒன்றிலும், வாரமிருமுறை இதழ் ஒன்றிலும் யுவராஜ் பேட்டி வெளியானது.

சில இதழ்கள், யுவராஜ் எண்கவுண்ட்டர் செய்யப்பட்டத தகவல் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தின. ( patrikai.com  அல்ல.)

 

w                                                                         கொங்கு சேதுபதி

இந்த நிலையில், யுவராஜ் சரணடைய பேவதாக மீண்டு் வாட்ஸ்அப் பேச்சை வெளியிட்டுள்ளார்.  அதில்,   ” வரும் ஞாயிற்றுக்கிழமை  (நாளை) 10.30மணி அளவில் நாமக்கல்  டி.எஸ்.பி. அலுவலகத்தில் யுவராஜ் சரணடைகிறார்” என்று  தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவரது தீரன் சின்னமலை பேரவை அமைப்பைச் சேர்ந்த  கொங்கு சேதுபதியிடம் இது குறித்து கேட்டபோது, “கவுண்டர் இன பெண்களின் மானம் காக்க நூறு நாட்களுக்கு மேல் தலைமறைவாக இருந்து பெரும் துயர் அடைந்த தீரன் யுவராஜ். அவரது குடும்பமும் நிறைய பாதிக்கப்பட்டது. ஆனாலும் இன மானத்துக்காக போராடுகிறார். அவரை வரவேற்க கவுண்டர் இன சொந்தங்கள் நாளை நாமக்கல்லில் கூடுவோம்” என்றும் கொங்கு சேதுபதி நம்மிடம் தெரிவித்தார்.

இந்த நிலையில், யுவராஜின் மனைவி சில நாட்களுக்கு முன், “விரைவில் யுவராஜ் சரணைவார்” என்று தெரிவித்திருந்தார். அதே நேரம், தற்போது அவர், “யுவராஜின் வாட்ஸ்அப் பேச்சுக்களை வெளியிட்டதாக திருச்செங்கோட்டைச் சேர்ந்த பிரபு என்பவர் உட்பட மூவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்துள்ளனர். இதனால் யுவராஜ் சரணடைவது தாமதமாகும்” என்று தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடந்த நூறு நாட்களுக்கு மேலாக தலைைமறைவாக இருந்து வாட்ஸ் அப் மூலம் தனது பேச்சுக்களை தொடர்ந்த வெளிப்படுத்தி வந்த யுவராஜ்  நாளை சரவணைவாரா என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.