நாளை தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து அன்பழகன் பிரசாரம் தொடங்குகிறார்

an1

சென்னை:

தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் களைகட்ட தொடங்கி உள்ளது. பல்வேறு கட்சிகளும், தங்கள் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி முழு வீச்சில் வாக்குகளை சேகரித்து வருகின்றன. இந்த நிலையில், தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் மேற்கொள்ள உள்ள முதல் கட்ட பிரசார சுற்றுப்பயணம் குறித்து தி.மு.க. தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

19-ந் தேதி(நாளை) மாலை 6 மணிக்கு பொன்னேரி, இரவு 8 மணிக்கு திருவொற்றியூர். 20-ந் தேதி மாலை 6 மணிக்கு மாதவரம், இரவு 8 மணிக்கு துறைமுகம். 21-ந் தேதி இரவு 7 மணிக்கு சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, இரவு 8 மணிக்கு ஆயிரம் விளக்கு, இரவு 9 மணிக்கு கொளத்தூர்.

22-ந் தேதி மாலை 6 மணிக்கு ஆவடி, இரவு 8 மணிக்கு வில்லிவாக்கம், இரவு 9 மணிக்கு அண்ணாநகர். 24-ந் தேதி மாலை 6 மணிக்கு வேளச்சேரி, இரவு 8 மணிக்கு தாம்பரம், இரவு 9 மணிக்கு பல்லாவரம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.