நாளை முதல் 500, 1000 ரூபாய் நோட்டுக்களுக்கு ‘குட்பை’….. மத்திய நிதியமைச்சகம் திட்டவட்டம்

 

டெல்லி:
500, 1000 ரூபாய் நோட்டுக்களை நாளை முதல் எங்கும் பயன்படுத்த முடியாது என்று மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.
புழக்கத்தில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று கடந்த மாதம் 8ம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். இது நாட்டு மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனினும் ரயில் டிக்கெட், பெட்ரோல் பங்க், அரசு மருத்துவமனை, காஸ் சிலிண்டர் கட்டணம் போன்றவற்றுக்கு குறிப்பிட்ட காலம் வரை செல்லும் என்று அறிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பும் தற்போது படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பெட்ரோல் பங்க்களின் ஆயிரம் ரூபாய் நோட் டுக்களுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது. தற்போது 500 ரூபாய் நோட்டுகளையும் வாங்க மறுக்கின்றனர். இதேபோல் ரயில் நிலையங்களிலும் படிப்படியாக குறைக்கப்பட்டு தற்போது பழைய ரூபாய் நோட்டுக்களுக்கு முழுவதும் தடை விதிக்கப்பட்டுவிட்டது.

இந்நிலையில் நாளை பழைய 500 ரூபாய் நோட்டுக்குளை அறவே பயன்படுத்த முடியாது என்று மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. மருந்து, சில வகை கட்டணங்களை செலுத்த இந்த 500 ரூபாய் நோட்டுக்களை பயன்படுத்த டிசம்பர் 15ம் தேதி கடைசி நாளாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இந்த கால அவகாசம் நீட்டிக்கப்படமாட்டது. அதனால் இனி டிசம்பர் 30ம் தேதி வரை வங்கியில் மட்டுமே இவற்றை செலுத்த முடியும். 500 ரூபாய் நோட்டை அனைத்து இடங்களிலும் பயன்படுத்த நாளை தான் கடைசி நாளாகும். அதனால் இன்று பயன்படுத்தாத ரூபாய் நோட்டுக்களை இனி வங்கியில் தான் செலுத்த நேரிடும்.
demonitaisation tommorow onwards fullly banned central finance ministry 500, 1000 notes