Rape
 
லண்டன்:
தென் ஆப்ரிக்காவில் ஒவ்வொரு 26 நொடிக்கும் ஒரு பெண் அல்லது சிறுமி பலாத்காரப்படுத்தப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ஐ.நா.வுக்கான சிறப்பு அறிக்கையாளர் துப்ரவ்கா சைமனோவிக், ‘பெண்களுக்கு எதிரான வன்முறை’ குறித்த ஆய்வில் ஈடுபட்டுள்ளார். வரும ஜூன் மாதத்தில் அவர் தனது பரிந்துரைகளை தாக்கல் செய்ய இருக்கிறார்.
சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், சிறுமிகள் மற்றும் அகதிப் பெண்கள் அதிக அளவு பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாவதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் அவர் தெரிவித்தாவது:
“தென்னாப்பிரிக்காவில், பத்து வயது சிறுமியை, அவளது குடிசையின் கழிப்பிடத்திலேயே வைத்து ஒருவன் பலாத்காரப்படுத்திவிட்டான். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அந்த சிறுமி மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறாள். “பலாத்காரப்படுத்தப்பட்டதை பள்ளியில் சொன்னால் அனைவரும்
அனைவரும் சிரிக்கிறார்கள். அவமானம் தாங்காமல் வேறு பள்ளிக்கு சிறுமியை மாற்றிவிட்டேன்” என்று அந்த சிறுமியின் தாயார் கதறுகிறார்.
‘தென் ஆப்ரிக்கா வடக்கு ஜோஹன்ஸ்பர்கில் உள்ள டைப்ஸ்லூட் என்ற பகுதியில் தான் இந்த கொடுமை நடந்தது.  இந்த பகுதியில், பலாத்காரத்தை ஏதோ சிறிய குடும்பப் பிரச்சினை போல எண்ணும் கொடுமை நிலவுகிறது. . இந்த சிறுமி விவகாரத்திலும் அவ்வாறே “தீர்ப்பு” சொல்லப்பட்டிருக்கிறது. பலாத்காரப்படுத்தியவன் சுதந்திரமாக உயிருடன் நடமாடுகிறான்’’ என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.