நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி

--

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி அடுத்த ஆண்டு ஐந்து ஒரு நாள் போட்டிகளிலும், மூன்று டி20 தொடர்களிலும் விளையாட உள்ளது. ஒரு நாள் போட்டி ஜனவரி மாதம் 23ம் தேதி நேப்பியர் நகரில் தொடங்க இருக்கிறது.

india

ஜனவரி 26 மற்றும் 28ம் தேதி நடைபெறும் போட்டிகள் மவுண்ட் மங்கன்யூவிலும், 31ம் தேதி ஹாமில்டனில் இறுதி போட்டி பிப்ரவரி 3ம் தேதி வெலிங்டனில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 3போட்டிகள் கொண்ட டி-20 தொடர் பிப்ரவரி 6ம் தேதி தொடங்குகிறது.

இதேபோல் மகளிர் அணி பங்கேற்கும் டி20 போட்டிகள் நியூசிலாந்தில் நடைபெற உள்ளன. 2021ம் ஆண்டு நடக்க இருக்கும் பெண்களுக்கான உலக கோப்பை போட்டியும் நியூசிலாந்தில் நடத்துவதற்கு ஒப்புதல் போடப்பட்டுள்ளது. எனினும், இந்தியாவில் இருந்து நியூசிலாந்துக்கு செல்லும் ஆண்கள் மற்றும் பெண்கள் அணி பங்கேற்கும் போட்டிகள் நேப்பியர், மவுண்ட் மங்கன்யூவ் மற்றும் ஹாமில்டன் மைதானங்களில் நடைபெற உள்ளது.

நியூசிலாந்தில் நடைபெறும் போட்டிகள் குறித்த அட்டவணை:

ஒருநாள் போட்டிகள்

முதல் ஒருநாள் போட்டி: ஜனவரி 23, நேப்பியர்

2வது ஒருநாள் போட்டி : ஜனவரி 26, மவுண்ட் மங்கன்யூவ்

3வது ஒருநாள் போட்டி : ஜனவரி 28, மவுண்ட் மங்கன்யூவ்

4வது ஒருநாள் போட்டி : ஜனவரி 31, ஹாமில்டன்

5வது ஒருநாள் போட்டி : பிப்ரவரி 3, வெலிங்டன்

டி20 போட்டிகள்:

முதல் டி20 போட்டி: பிப்ரவரி 6, வெலிங்டன்

2வது டி20 போட்டி: பிப்ரவரி 8, அக்லாண்ட்

3வது டி20 போட்டி: பிப்ரவரி 10, ஹாமில்டன்