முதல்வர் வேட்பாளர் எண்ணிக்கை மேலும் கூடிக்கொண்டே இருக்கிறது..” என்று வானிலை எச்சிரிக்கை மாதிரி சொல்லிக்கொண்டே உள்ளே வந்தார் நியூஸ்பாண்ட்.
“வந்து அமர்ந்து செய்திகளைக்கொட்டும்..” என்று கொஞ்சம் அதிகாரமாகவே நம் அன்பை வெளிப்படுத்தினோம்.
சோஃபாவில் ரிலாக்ஸ்டாக அமர்ந்தவர், நாம் கொடுத்த லெமன் ஜூஸை ருசித்து பருகியபடியே பேச ஆரம்பித்தார்:
download (1)
“மக்கள் நலக்கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் என்று யாரும் கிடையாது. நாங்கள் இணைந்து தயாரித்த குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தை முன்வைத்தே தேர்தலை சந்திப்போம் என்று ஏற்கெனவே சொன்னார் வைகோ.  ஆனால் அவரே, மதுரை கூட்டத்தில், “தொண்டர்கள் விரும்பினால் முதல்வர் வேட்பாளராக போட்டியிட தயார்” என்றார்.
இப்போது,  . ‘மக்கள் நல கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக தலித் தலைவரான திருமாவளவனை அறிவிக்க வேண்டும்’ என்று  அக்கட்சியின் கொள்கை பரப்புத் துணைச் செயலாளர் பாலாஜி பேசியிருக்கிறார்!”
“தொண்டர்கள், நிர்வாகிகள் எல்லோரும், ஆர்வத்தில் சொல்வதுதானே…!”
“அப்படி இதை எடுத்துக்கொள்ள முடியாது..  பாலாஜி  சொன்னdownload (2)தை,  அக்கட்சியின் பொதுச் செயலாளர்  ரவிக்குமார்.வழிமொழிந்திருக்கிறார். இதற்கு இந்த நிமிடம் வரை திருமாவளவன் மறுப்போ விளக்கமோ சொல்லவில்லை!”
“ஓ…!”
“ஆமாம்…! ஏற்கெனவே, நல்லகண்ணுவை முதல்வர் வேட்பாளர் ஆக்க வேண்டும் என்று சிலர் சொல்லிவருகிறார்கள். ஆக, நான்கு கட்சிகள் கொண்ட மக்கள் நல கூட்டணியில், மூன்று முதல்வர் வேட்பாளர்கள்!”
download (5)
”ஹா.. ஹா…! ஹா””
“தி.மு.க.வில் கருணாநிதிதான் முதல்வர் வேட்பாளர் என்று ஸ்டாலினே சொன்னாலும், அவருக்கும் ஆசை அடங்கவில்லை என்கிறார்கள்.  அவரும் சிலபல திட்டங்கள் வைத்திருக்கிறாராம். ஆக, அங்கே இரண்டு முதல்வர் வேட்பாளர்கள்!”
“ஆமாம்.. ஸ்டாலின் மனைவி துர்காதான்,  கோயில், யாகம் என்று பிஸியாக இருக்கிறாரே..”
“ம்…! ஏற்கெனவே, விஜயகாந்த், அன்பு மணி என்று இரண்டு முதல்வர் வேட்பாளர்கள் பாவம், தமிழகம் முழதும் சுற்றி வந்தார்கள்!”
download (4)
“ஆனால், தே.மு.தி.க., பா.ம.க., பா.ஜ.க.   ஆகிய மூன்று கட்சிகளுக்குள் கூட்டணி முடிவாகிவிட்டதாகவும்,  113 –  70 –  51  என்ற சீட்டுகள் பிரிக்கப்பட்டதாகவும் செய்திகள் வந்ததே…!”
பெரிதாக சிரித்த நியூஸ்பாண்ட், “உமக்குத் தெரியாததா..? ஒவ்வொரு கட்சியும் தனது ஆக்டோபஸ் கரங்களால்  மற்ற கட்சியின் ஆக்டோபஸ் கரங்களுடன்  துண்டு போட்டு பேச்சுவார்த்தை நடத்துகின்றன. ஆகவே எண்ணற்ற சந்திப்புகள், என்னற்ற பேச்சு வார்த்தைகள். அப்படி ஒன்றுதான் அந்த மூன்று கட்சி கூட்டணி உறுதியாகிவிட்டது என்பது. அதன் பிறகு பா.ம.க.வே மறுத்துவிட்டதே…!” என்றார்.
download (3)
“ஆமாம்.. ஆமாம்..!”
“இந்த நிலையில் பிற கட்சிகளுக்காக ஏன் தேவுடு காக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்திருக்கிறது பா.ஜ.க.  ரஜினியை கட்சிக்குள் இழுப்பது. அவரையே முதல்வர் வேட்பாளராக அறிவித்து தனித்து களம் காண்பது என்பது திட்டமாம்!”
“ஆகா… ரஜினி நழுவுகிற மீனில் கழுவுகிற மீன் அல்லவா? தவிர,  அவரது படம் ஏதும் ரிலீஸ் ஆகவில்லையே.. அப்போதுதான் அவரது அரசியல் பற்றிய பேச்சுக்கள் எழும்!”
“ரஜினி என்றால் கிண்டலாக இருக்கிறதா உமக்கு? ரஜினியும் யோசித்து யோசித்து ஒரு முடிவு எடுத்துவிட்டார் என்கிறார்கள். தற்போது நடித்துவரும் கபாலி, எந்திரன் 2 ஆகிய இருபடங்களோடு திரையுலகுக்கு மூட்டை கட்டிவிட்டு அரசியலில் இறங்க விரும்புகிறாராம். அதனால்தான் சமீபத்தில் ரசிகர் மன்ற மாநாடு, நிதி உதவி எல்லாம் நடந்தபோது பச்சை கொடி காட்டினார்!”
rajini
“ஓ..!”
“அதோடு பழ.கருப்பையா வீடு தாக்கப்பட்டது குறித்து அவருக்கு போன் போட்டு விசாரித்திருக்கிறாரே…!”
“பரிதாபப்பட்டு விசாரித்திருப்பார்!”
“பரிதாபப்பட பல விசயங்கள் தினமும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன…! எல்லாவற்றையும் விசாரிக்கிறாரா என்ன?”
“ஆனால்,  பா.ஜ.கவில் முதல்வர் வேட்பாளர் என்று அறிவிப்பதில்லை.. என்றெல்லாம் ஏற்கெனவே  பேசினார்களே…!”
“அரசியல்வாதி பேச்சு அடுத்த நிமிசம் போச்சு!”
“ஹா..ஹா..! சரி, அப்படியானால் ரஜினியும் முதல்வர் வேட்பாளர் ஆகிறார். ஆனால் மோடி, தமிழகம் வந்திருக்கும் வேளையில் ரஜினி இல்லையே…!”
“தேர்தலுக்கு நாள் இருக்கிறது.. அதற்குள் இருவரும் இணைந்து மேடையில் தோன்றுவார்கள் என்கிறது பாஜக வட்டாரம்…!”
“சரி..வேறு யாரும் முதல்வர் வேட்பாளர் லிஸ்டில் இருக்கிறார்களா..?
download
”“சிரிக்காமல் இருந்தால் சொல்கிறேன்! ரத்குமாரும், முதல்வர் வேட்பாளாக களம் இறங்கப்போகிறாராம்!”
“ஹா . ஹா! ஸாரி,  ஸாரி!  அவர் கட்சியில் சிலர்  இருந்தபோதே அப்படி ஓர் முயற்சியில் இறங்காமல், அ.தி.மு.க.வின் கிளைக்கழகமாக செயல்பட்டார். இப்போது  என்ன திடீர் ஆசை?”
“ஆசையால் அல்ல..  ஆதங்கத்தால் இந்த முடிவு எடுத்திருக்கிறாராம்!”
“அடடே…!”
“யெஸ்..  ஆளும் அ.தி.மு.க. மீது எத்தனையோ விமர்சனங்கள் எழுந்தபோதும், ஆதரவாகவே பேசி வந்தும், முதல்வர் மதிக்கவில்லை என்ற வருத்தம் சரத்குமாருக்கும் அவர் மனைவி ராதிகாவுக்கும் இருக்கிறது. சரி, திமுக பக்கம் செல்லலாம் என்றால், அங்கு சரியான  ரெஸ்பான்ஸ் இல்லை. இன்னொரு பக்கம்,  சொந்த கட்சியிலிருந்து பல நிர்வாகிகள் வெளியேறிய நிலை…! ஆகவே, வரும் தேர்தலில் “நமது பலத்தை காட்ட வேண்டும்” என்று  சூளுரைத்திருக்கிறார் ராதிகா. சரத்தும் அதை வழிமொழிந்திருக்கிறார்..!”
“அவர்கள் சூளுரைப்பது, வழிமொழிவது எல்லாம் இருக்கட்டும்…  என்ன திட்டம் வைத்திருக்கிறார்களாம்?”
“யாருடனும் கூட்டணி வேண்டாம். முதல்வர் வேட்பாளராக சரத்தை அறிவித்து தனித்தே போட்டியிடலாம் என்கிறாராம் ராதிகா. விஜகாந்த் போல, தனித்து போட்டியிட்டு  நமது பலத்தை வெளிப்படுத்துவோம் என்கிறாராம்!”
“அதுவும் சரிதான்!”
“அ.தி.மு.கவிலும் ஜெயலலிதாவைத் தவிர இன்னும் ஒரு முதல்வர் வேட்பாளர் களம் இறங்கப்போகிறார் என்கிறார்கள்..!”
download (6)
“அட.. என்ன சொல்கிறீர்? நம்பும்படியாக இல்லையே…!”
“என் காதுக்கு வரும் தகவலைச் சொல்கிறேன்.. கேளும்! சுப்ரீம் கோர்ட்டில் நடக்கும் சொத்து குவிப்பு வழக்கு எப்டி தீர்ப்பு வரும் என்பது தெரியாத நிலை… உடல் நலம்… இவை இரண்டையும் உத்தேசித்து, சசிகலாவையும் இந்தத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறார்களாம் அங்கு.  ஒருவேளை அதிமுக ஜெயித்து, ஜெயலலிதா முதல்வராக முடியாத நிலை என்றால், சசிகலா ஆகிவிடலாம் அல்லவா..?  முன்பு போல “வெளியில் இருந்து” ஒருவரை ஏன் முதல்வராக்க வேண்டும் என்று நினைத்து முடிவெடுத்திருக்கிறார்களாம்..”
“ஓ..! தஞ்சை, ஸ்ரீரங்கம், மன்னார் குடி ஆகிய ஒன்றில் சசிகலா போட்டியிடப்போடதாக வந்த செய்தி உறுதியானதுதான் போலும்!”
“ஒருவிதத்தில் தமிழர்கள் பெருமை கொள்ள வேண்டும்!”
“என்ன சொல்கிறீர்..”
”தமிழர்களை முன்னேற்றியே தீருவது என்று எத்தனை பேர், முதல்வர் வேட்பாளராக களம் இறங்க துடிக்கிறார்கள் பார்த்தீரா..  ?”