நில அபகரிப்புக் கும்பலிடமிருந்து தங்களை பாதுகாக்க மோடிக்கு ட்விட்டரில் வேண்டுகோள்

மும்பை:

ழம்பெரும் இந்தி நடிகர் திலீப்குமாரின் மனைவி சாய்ரா பானு நிலம் அபகரிப்புக் கும்பலிடம் இருந்து தங்களைக் காக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு டுவிட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பத்ம விபூசண் விருது பெற்ற இந்தி நடிகர் திலிப்குமாருக்குச் சொந்தமான பங்களா மும்பை பாலி ஹில் என்னுமிடத்தில் உள்ளது. கட்டுமானத் தொழிலதிபர் சமீர் போஜ்வானி போலி ஆவணங்கள் மூலம் இந்த பங்களாவைக் கைப்பற்ற முயல்வதாகக் கடந்த ஆண்டு மும்பைக் காவல்துறையின் பொருளாதாரக் குற்றப்பிரிவில் சாய்ரா பானு புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் சமீர் போஜ்வானியைக் கைது செய்தனர்.

சமீர் போஜ்வானி இப்போது சிறையில் இருந்து வெளிவந்துள்ள நிலையில் திலிப்குமாரின் டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அதில், சமீர் போஜ்வானி ஆள்பலம், பணபலம் ஆகியவற்றைக் கொண்டு தங்களை மிரட்டுவதாகவும், அது குறித்து மும்பையில் சந்தித்துப் பேசத் தங்களுக்கு நேரம் ஒதுக்குமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி