j kat

சென்னை:

“தமிழை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக ஆக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உரிய முயற்சி எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டும் “ என்று முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு எழுதியுள்ளார்.

அடிக்கடி பரபரப்பான கருத்துக்களை வெளியிடுபவர் முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு. அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளவாதவது:

“அலுவல் மொழி குறித்த இந்திய சட்டப்பிரிவு 348(2) மற்றும் .7 – ன் படி, தமிழை நீதிமன்ற வழக்காடு மொழியாக்குவது முழுக்க முழுக்க தமிழக முதல்வரின் கைகளில் தான் உள்ளது. இனியும் தமிழக முதல்வர் தமிழர்களை ஏமாற்றாமல் தனக்கிருக்கும் அதிகாரத்தை முழுமையாக பயன்படுத்தி தமிழை வழக்காடு மொழியாக்க உரிய முயற்சிகளை எடுக்க வேண்டும். இது குறித்து அவர் ஆளுநரிடம் தெரிவிக்க வேண்டும்: குடியரசு தலைவரிடமும் இது குறித்து பேச வேண்டும். இல்லாவிட்டால் முதல்வர் பதவியைவிட்டு அவர் உடனே விலக வேண்டும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

தமிழக நீதிமன்றங்கள் அனைத்திலும் தமிழில் வாதாட வகை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பலமாக எழுந்திருக்கும் நேரத்தில் முன்னாள் நீதிபதி கட்ஜூவின் கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இவர், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.