நெகிழ வைத்த கபாலி!

ori_pc_36255-img-2015-11-14-1447499302-rajinifans-600

“கபாலி” படப்பிடிப்பு, மலேசியாவில் 4ஜி வேகத்தில் நடந்துகொண்டிருக்கிறது. இதற்கிடையே சில முக்கிய பிரமுகர்கள் ரஜினி சந்தித்து வருகிறார். சில சமயங்களில் வெளியில் ஹாய்யாக வரலாம் என்று கிளம்பினால், மக்கள் சூழ்ந்துகொள்கிறார்கள்.

இவ்வளவு பிஸியிலும் ரஜினி செய்துள்ள ஒரு காரியம் நெகிழ வைத்துவிட்டது மலேசிய மக்களை!

இதய நோயால் பாதிக்கப்பட்ட மலேசிய ரசிகர் ஒருவருக்கு ரஜினியை நேரில் சந்திக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு. அவரைப்பற்றி ரஜினியிடம் தகவல் சொல்லியிருக்கிறார்கள்.

உடனே அந்த ரசிகரை வரச் சொல்லி அவரை சந்தித்தார். ரஜினியை சந்தித்த உற்சாகத்தில் அந்த ரசிகர் கடிப்பிடித்து அழுதே விட்டார். அவரை இயல்புநிலைக்கு கொண்டு வந்து, சிறிது நேரம் பேசி, உற்சாகம் அளித்துள்ளார் ரஜினி.

இதுதான் மலேசிய மக்கள் நெகிழ காரணம்.

“இவ்வளவு பெரிய நடிகர், தனது பிஸி ஷெட்யூலிலும் ஒரு ரசிகருக்கு நேரம் ஒதுக்கி சந்தித்தாரே” என்று புகழ்கிறார்கள். அதோடு, அந்த ரசிகரை ரஜினி சந்தித்த படத்தை வாட்ஸ்அப்பிலும் உற்சாகமாக பரப்பி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.