ss
ந்தியாவில் முதன்முறையாக பெங்களூருவில் “கால் பைக்” சேவை துவக்கப்பட்டிருக்கிறது.  கால் டாக்சி பாணியில், வாடகை பைக் சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம். கால் டாக்சி, ஆட்டோ சர்வீஸில் புகழ் பெற்ற ஓலா நிறுவனம்தான் இந்த பைக் சேவையையும் துவக்கி இருக்கிறது. பைக் சவாரிக்கான கட்டணமும் குறைவுதானான்.
பின்னால் அமர்ந்திருப்பவர், ஓட்டுனரை பிடிக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. இதற்காகவே ஓட்டுனரின் இடுப்பு பாகத்தில் கைப்பிடி வைத்திருக்கிறார்கள்.
“பெங்களூருவில்  38 லட்சம்  இரு சக்கர வாகனங்களும்,  10 லட்சம் கார்களும் இயங்குகின்றன. போக்குவரத்து நெரிசலில் இந்தியாவிலேயே 2வது மோசமான நகரம் என்று பெயர் வாங்கியிருக்கிறது பெங்களூரு.   இங்கு ஒரு மணி நேரத்திற்கு ஒரு வாகனம் சராசரியாக 9.5 கி.மீ தூரத்தை மட்டுமே கடக்க முடியும்.  இந்த நிலையில் கால் பைக் சேவை வந்திருப்பது வரப்பிரசாதம்தான்” என்று மகிழ்கிறார்கள் பெங்களூருவாசிகள்.