நெட்டிசன்: சீமான் சொன்ன தவறான தகவல்

s
க.தமிழன் (Tamizhan Ka ) அவர்களின் முகநூல் பதிவு:
“டிராபிக் ராமாசாமியை விட கம்மியா ஓட்டு வாங்கியவர்கள் கம்யூனிஸ்ட்கள் என்று அருணனைப் பார்த்து ஆவேசமாக சத்தம் போட்டு கேவலப்படுத்தி சீமான் பேசினார்.. நானும் அவர் சொன்னது உண்மையென்றே நம்பினேன்..

பிறகு ஆர்.கே.நகர் தொகுதியில் வேட்பாளர்கள் பெற்ற ஓட்டுக்களின் எண்ணிக்கைய இணையத்தில் பார்த்தேன்..

ஜெயலலிதா (AIADMK) : 160432
மகேந்திரன் (Communist) : 9710
டிராபிக் ராமசாமி (Independent) :4590

இப்போ டிராபிக் ராமசாமியோட கம்யூனிஸ்ட்கள் அதிகமாக வாங்கியிருக்காங்களா, இல்ல குறைவாக வாங்கியிருக்காங்களா?

காட்டுக் கூச்சல் போட்டு கத்தியும் ஆவேசமாகவும் உணர்ச்சியாகவும் பேசினால் எவ்வளவு வேண்டுமானாலும் பொய் பேசலாம், யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள் என்று தங்களது கட்சியின் பொதுக் கூட்டங்களில் வரிசையாக பொய்களை அள்ளிவிடுவது சீமானின் வழக்கம்.. மந்திரித்து விட்ட ஆட்டு மந்தைகள் போல சீமானின் அனைத்து பொய்களுக்கும் உணர்ச்சிவசப்பட்டு கைதட்டி விசிலடிக்கும் அங்கே கூடியிருக்கும் கூட்டம்.

அதே பழக்க தோஷத்தில் தந்தி தொலைக்காட்சியின் நேரலை விவாதத்திலும் சொல்லிவிட்டார்.. பச்சையாக பொய்களை அள்ளிவிடுவது அவரது இயல்பு.. ஆனா கொடுமை என்னன்னா, அதனை நம்மையும் நம்பவும் சொல்வார்.. இந்த “ஏய்..ஏய்.. திட்டுப்புடுவேன்.. ஒரு எழவும் இல்ல.. யோவ்.. லூசாய்யா நீ” என்ற வார்த்தைகள் எல்லாம் அவரின் பொதுக் கூட்டத்தில்தான் வரும்.. ஆனா தொலைக்காட்சி விவாதங்களில் விசிலடிச்சி ஆதரிக்க அங்கே அவரின் ரசிக குஞ்சுகள் கிடையாது..

பொய்களை மட்டுமே மூலதனமாகக் கொண்டு சீமான் கட்சியை வளர்க்கப் பார்க்கிறார்.. வாழ்த்துகள்..

இப்பவும் முட்டுக் கொடுப்பானுங்க பாருங்க… தம்பி…நான் எட்டாம் வகுப்பு பாஸ்.. அவன் பத்தாம் வகுப்பு பெயிலு..

# பாஸ் பெருசா.. பெயில் பெருசான்னு…!”

Leave a Reply

Your email address will not be published.