m 1
 வக்ரஹம் நாடகம் முடிந்ததும் மொத்த பத்திரிகையாளர் கூட்டமும் கே.பி.யை பாராட்ட, கே.பி. இந்த நாடகம்வெற்றி பெற்றதற்கு இதில் முக்கிய பாத்திரம் ஏற்று நடித்த மனோரமாவைச் சேரும் என்று சொல்லி மேக்-அப் ரூமில் இருந்த நடிகை மனோரமாவை அழைத்து ” பாராட்டுவதென்றால் இவரைப் பாராட்டுங்கள் ” என்று அழைத்துவந்து பாராட்டினார். தனக்கு கிடைத்த விருதுகளில் பெரிய விருது என்று கூறும் மனோரமா கே.பி. யின் பல படங்களில் நடித்தவர். உன்னால் முடியும் தம்பி படத்தில் அவருடைய அண்ணி பாத்திரம் மிக அற்புதமான பாத்திரப் படைப்பு. மனோரமாவும் பிரமாத படுத்தியிருப்பார்.