நெட்டிசன்: ‘மலடிகள் வாழத் தகுதியற்றவர்கள்’ – பிரேமலதா விஜயகாந்த்.

bre

‘உனக்கெல்லாம் குழந்தை பிறந்திருந்தால்தானே ஆண்களை மதிக்கத் தெரியும்’ எனறு தமிழக முதல்வரை பார்த்து, பிரேமலதா பேசிய வன்முறையான பேச்சு,
‘மலடி’ என்று மருமகளைத் துன்புறுத்துகிற மாமியாரின் பேச்சை விட இழிவானது. அதுகூட அறியாமையிலும் தன் மகன் மற்றும் குடும்ப வாரிசு ஏக்கத்திலும் வருகிற சொல்.

ஆனால் பிரேமலதாவின் பேச்சு குழந்தை பெற்றுக் கொள்ள முடியாத பெண்களை வாழத் தகுதியற்றவர்களாகச் சித்திரிக்கிறது. ஒரு முதல்வரையே இப்படிப் பார்க்கிறார் என்றால் சாமான்ய பெண்களை எவ்வளவு இழிவாக மோசமாகப் பார்ப்பார்.

இந்த லட்சணம் கொண்ட இவர், எதிர்க்கட்சியின் தலைவர். இவர்கள் ஆட்சிக்கு வந்தால், குழுந்தைப் பெற்றுக் கொள்ள முடியாவர்களை எல்லாம் கொலை செய்துவிடுவார்கள் போலும்.
பாவம், இவருக்கு மருமகளாக வரப்போகிற பெண்களை நினைத்தால் மனம் பதறுகிறது.

ஒரு நொடிக்கு முன் பேசிய வார்த்தையைகூட நினைவில் வைத்துக் கொள்ளாமல் அடுத்த வார்த்தையைத் தொடர்பற்றுப் பயன்படுத்திக் கேட்பவனைக் கேலி செய்கிற, எவனுக்கும் புரியாத விஜயகாந்தின் பேச்சு; பிரேமலதா பேச்சை விடப் பல மடங்கு முற்போக்கானது.

ஏன் பிரேமலதா மீது அவதூறு வழக்குப் பதிவு செய்து சிறையில் வைக்கக்கூடாது?
அதை ஏன் நாம் வலியுறுத்துக் கூடாது????

மாணிக்கம்  ( முகநூல் பதிவு)

2 thoughts on “நெட்டிசன்: ‘மலடிகள் வாழத் தகுதியற்றவர்கள்’ – பிரேமலதா விஜயகாந்த்.

  1. தவறான பதிவு .உனக்கு எல்லாம் குடும்பம் இருந்தாத்தானே என்று வினவினார் இதையே திரித்து எழுதுகிறீர்

  2. பத்திரிகை.காம் இப்படிதாவறான பதிவை ஏன் அனுமதிக்கிறீர்.

Leave a Reply

Your email address will not be published.