நெல்லை: முன்னாள் போலீஸ்காரர் வெட்டிக் கொலை

நெல்லை:

திருநெல்வேலி ஜங்ஷன் உடையார்பட்டியில் இன்று இரவு மணிகண்டன் (வயது 37) என்பவர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

இவர் 2000ம் ஆண்டில் போலீஸ் வேலையில் சேர்ந்துள்ளார். பின்னர் இவர் 2010ம் ஆண்டில் போலீஸ் பணியில் இருந்து விலகி விட்டதாக கூறப்படுகிறது.

இவரது கொலைக்கு பெண் தகராறு பின்னணியாக இருக்கும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இது குறித்து நெல்லை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.