நேற்றைய நெட்டிசன் பதிவுகள் எதிரொலி : பெட்ரோல் விலையில் மாற்றமில்லை.

சென்னை

ட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட உடன் பெட்ரோல் விலை உயர்ந்ததை நெட்டிசன்கள் விமர்சித்ததால் இன்று பெட்ரோல் விலையில் மாற்றமில்லை.

கடந்த 57 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்து வந்தது. இதை ஒட்டி மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரும் போது பாஜக அரசை விமர்சிப்பவர்கள் இறங்கும் போது அரசை பாராட்டுவதுஇல்லை என பாஜகவினர் கருத்துக் கூறினார்கள்.

இந்நிலையில் ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் நேற்று முன் தினம் வெளியாகியது. அதற்கு அடுத்த நாளான நேற்று மீண்டும் பெட்ரோல் விலையில் 12 காசு ஏற்றப்பட்டது. இதற்கு நெட்டிசன்கள் தங்கள் பதிவில் கடுமையாக விமர்சித்தனர். இதற்கு முன்பு நடந்த சட்டப்பேரவை தேர்தல் சமயத்திலும் பெட்ரோல் விலை உயராமல் இருந்ததை அவர்கள் சுட்டிக் காட்டினார்கள்.

இன்று வெளியான அறிவிப்பின் படி பெட்ரோல் விலை உயராமல் உள்ளது. டிசல் விலையில் லிட்டருக்கு 8 காசுகள் குறைந்துள்ளது. நெட்டிசன்கள் பலரும் தங்கள் பதிவால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.