நோயாளி இறந்து விட்டதாக கூறி வேறு உடல் ஒப்படைப்பு

ங்க்லி,  மகாராஷ்டிரா.

காராஷ்டிரா மாநிலம் சங்க்லியில் அரசு மருத்துவமனை ஒன்று உள்ளது.  அங்கு அவினாஷ் பக்வடே என்னும் 50 வயது முதியவர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அவருக்கு கல்லீரல் கோளாறு ஏற்பட்டதால் அங்கு சிகிச்சை மேற்கொண்டார்.    அவருடைய குடும்பத்தினருக்கு மருத்துவமனையில் இருந்து தொலைபேசி அழைப்பு ஒன்று நேற்று முன் தினம் வந்துள்ளது.   அப்போது அவினாஷ் இறந்து விட்டதாக மருத்துவமனை ஊழியர் தெரிவித்துள்ளார்.

அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மருத்துவமனைக்கு விரைந்துள்ள்னர்.   அங்கு முழுவதும் துணியால் மூடப்பட்ட உடல் ஒன்றை மருத்துவமனை ஊழியர்கள் ஒப்படைத்துள்ளனர்.    பிரேத பரிசோதனை நடந்ததால் முழுவதும்  மூடப்பட்டதாக கூறியதால் உறவினருக்கு சந்தேகம் உண்டானது.   கல்லீரல் நோய்க்கு பிரேத  பரிசோதனை எதற்கு என வினா எழுப்பி உள்ளார்.  ஆனால் மருத்துவமனை அதிகாரிகள் அவர்களை மிரட்டி உடலை எடுத்துப் போகச் சொல்லி உள்ளனர்.

வீட்டில் அந்த உடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்ட போது வேறு சில உறவினர்களுக்கும் அது அவினாஷ் அல்ல என்னும் சந்தேகம் எழுந்தது.  அதன்  பிறகு துணியை அகற்றி பார்த்த போது அந்த உடல் அவினாஷ் உடையது அல்ல என தெரிய வந்துள்ளது.    அதனால் அவினாஷின் உறவினர்கள் மருத்துவமனைக்கு சென்றுள்ள்னர்.

அங்கு அவினாஷ் சிகிச்சை பெற்று வருவதை உறவினர்கள் நேரடியாக பார்த்தனர்.    அவினாஷ் இறந்ததாகக் கூறி வேறு ஒரு உடலை அளித்த ஊழியர்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.   மருத்துவமனை சூப்பிரண்டு சுபோத்  இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுகப்படும் என தெரிவித்துள்ளார்.

அவினாஷ் என்னும் பெயரில் ஒப்படைக்கப் பட்ட உடல் யாருடையது என்பதை யாராலும் கண்டு பிடிக்க முடியவில்லை.    இதுவரை அந்த உடலுக்கு யாரும் உரிமை கோரி வரவில்லை.